For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சரியாக வாய்ப்பு தராத கொல்கத்தா அணி.. அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைக்கும் குல்தீப்.. உண்மையா?

கான்பூர்: கொல்கத்தா அணியில் சரியாக வாய்ப்பு கிடைக்காதது குறித்து குல்தீப் யாதவ் மனம் உருகி பேசியுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வந்த 14வது ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக பாதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த முறையும் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி படு சொதப்பலாக ஆடி வருகிறது. இதற்கு குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படாததும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

வாய்ப்பே இல்லை

வாய்ப்பே இல்லை

கொல்கத்தா அணியில் கவுதம் கம்பீர் கேப்டனாக இருந்த போது, ஸ்பின்னிங்கிற்கு முதல் தேர்வாக இருந்த குல்தீப் யாதவிற்கு, கடந்த இரண்டு வருடங்களாகவே கொல்கத்தா அணியில் சரியாக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. கடந்த சீசனில் ஒரு சில போட்டிகளில் அவர் விளையாடிய நிலையில், நடப்பு சீசனில் ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஒன்று. ஆனால் இதில்கூட குல்தீப்பிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

குல்தீப் விளக்கம்

குல்தீப் விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள குல்தீப், இந்திய அணிக்காகவே விளையாடிய எனக்கு உள்நாட்டு தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது அநீதி, அதற்காக வருத்தப்பட முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. கடும் முயற்சி செய்யலாம், அணி நிர்வாகத்திடம் சரியான காரணம் கேட்கலாம். அதற்கு அவர்கள் பதில் தருவார்கள். ஆனால் கொல்கத்தா அணியில் எந்த விளக்கமும் எனக்கு கொடுக்கப்படவில்லை. ஒருவேளை கவுதம் கம்பீர் என் மீது வைத்த நம்பிக்கை, தற்போது இருக்கும் அணி என் மீது வைக்கவில்லை எனக்கூறலாம்.

கே.கே.ஆர். சொதப்பல்

கே.கே.ஆர். சொதப்பல்

கொல்கத்தா அணியின் மோசமான செயல்பாடு குறித்து பேசியுள்ள குல்தீப், சர்வதேச போட்டியை பார்த்தால், விராட் கோலிக்கு எப்படியாவது சிறப்பாக ஆட வேண்டும், வென்றுவிட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதே எண்ணம் தான் கவுதம் கம்பீருக்கும் இருந்தது. ஆனால் தற்போதுள்ள கொல்கத்தா அணியில் அந்த எண்ணம் இல்லை என நினைக்கிறேன். தோற்றால் என்ன நடக்கும் என்ற வகையிலேயே அவர்கள் யோசிக்கிறார்கள் என நினைக்கிறேன் என்று குல்தீப் கூறியுள்ளார்.

சர்வதேச வாய்ப்பு

சர்வதேச வாய்ப்பு

ஐபிஎல் தொடரை போலவே இந்திய அணியிலும் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய டெஸ்ட் அணிக்காகக் கடைசியாக 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விளையாடிய இவருக்கு தற்போதுதான், கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதிலும் அவர் சொதப்பியதால், அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்.

Story first published: Sunday, June 13, 2021, 17:04 [IST]
Other articles published on Jun 13, 2021
English summary
Kuldeep Yadav gets Emotional for lack of chances in KKR Team
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+