Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பை தொடர்.. கடந்த 5 உலகக்கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் யார்? முழு பட்டியல் இங்கே!

மும்பை: கடைசியாக நடைபெற்ற 5 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.

2003ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்றது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய மோசமான தோல்வியை அடைந்தது. இருப்பினும் தொடர் நாயகன் விருது அதிக ரன்கள் குவித்த இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது. மொத்தமாக ஆடிய 11 இன்னிங்ஸ்களில் 61.18 சராசரியில் 673 ரன்களை குவித்தார் சச்சின் டெண்டுல்கர். இதற்காக அவருக்கு தங்க பேட் விருதாக வழங்கப்பட்டது.

Leading run Scorers at the last five mens world cups ahead of the World Cup 2023

2007ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் குரூப் சுற்றுடன் வெளியேறியதால், அடுத்ததாக அம்முறையில் உலகக்கோப்பை நடத்தப்படவில்லை. அந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ ஹெய்டன் 10 இன்னிங்ஸ்களில் 73.22 சராசரியுடன் 659 ரன்களை விளாசினார்.

2011ஆம் ஆண்டு இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து உலகக்கோப்பை தொடரை நடத்தின. அந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில் 28 ஆண்டுகளுக்கு பின் இந்தியா தோனி தலைமையில் உலகக்கோப்பையை வென்றது. அந்த தொடரில் 9 இன்னிங்ஸ்களில் விளையாடிய தில்ஷன், 62.50 பேட்டிங் சராசரியுடன் 500 ரன்களை விளாசினார்.

2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்தின. அதேபோல் அதன் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதின. ஆஸ்திரேலிய 5வது முறையாக உலகக்கோப்பையை வென்றது. ஆனால் அந்த உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியின் கப்தில் தான் அதிக ரன்களை குவித்தார். 9 இன்னிங்ஸ்களில் விளையாடி 68.37 பேட்டிங் சராசரியுடன் 547 ரன்களை குவித்தார்.

அதேபோல் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்றது. ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்ட உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதில் முதல்முறையாக இங்கிலாந்து அணி பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் கோப்பையை வென்றது. அந்த தொடரில் இந்திய அணியின் ரோகித் சர்மா 5 சதங்கள் உட்பட 81.00 என்ற பேட்டிங் சராசரியுடன் 648 ரன்களை குவித்தார்.

Story first published: Friday, September 29, 2023, 10:18 [IST]
Other articles published on Sep 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+