Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லக்னோக்கு எதிராக பூஜ்ஜியம்.. முதல் வெற்றியை பெறுமா மும்பை? இரு அணிகளிலும் அதிரடி மாற்றம்

லக்னோ : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை, லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவு, பல மாற்றத்தை கொண்டு வரும். இந்த ஆட்டத்தில் மும்பை வென்றால், அது சிஎஸ்கேக்கு பாதகம் ஆகும். அதே சமயம், ராஜஸ்தான்,கொல்கத்தா போன்ற அணிகளுக்கும் நன்மையாக மாறும்.

இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் இன்றைய ஆட்டத்தில் லக்னோக்கு ஆதரவாக உள்ளனர். இந்த நிலையில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தவதாக அறிவித்துள்ளது. ஆடுகளம் எப்படி செயல்படும் என்று கணிக்க முடியாததால் இந்த முடிவை எடுத்ததாக ரோகித் சர்மா கூறினார்.

Lucknow and Mumbai made a several changes in their playing xi

கடந்த சில போட்டிகளில் சிறப்பாக தங்கள் அணி வீரர்கள் விளையாடுவதாகவும், அதில் பல நல்ல விஷயங்கள் கிடைத்திருப்பதாகவும் ரோகித் கூறினார். எனினும் அன்றைய நாளில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்றும் ரோகித் சர்மா கூறினார்.

இதே போன்று இடதுகை சுழற்பந்துவீச்சாளருக்கு பதில் ஆப் ஸ்பின்னரை கொண்டு வந்துள்ளதாக ரோகித் கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய லக்னோ அணி கேப்டன் குர்னல் பாண்டியா, டாசை இழந்தது மிகவும் நல்ல விஷயமாக நினைக்கிறேன். இன்றைய ஆட்டத்தில் நாங்களும் முதலில் பேட்டிங் செய்ய தான் இருந்தோம்.

இன்றைய ஆட்டத்தில் நாங்கள் பல மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறோம். நவீன் உல் ஹக், தீபக் ஹூடா ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் விளையாடுகிறார்கள். கேயில் மேயர்ஸ்க்கு இன்றைய போட்டியில் இடமில்லை என்று கூறியுள்ளார். சிவப்பு மண் இன்றைய ஆடுகளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், ஆடுகளத்தில் கொஞ்சம் பந்தின் பவுன்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பனிப்பொழிவும் இல்லாதது, இரண்டாவது பந்து வீசும் அணிக்கு ஆபத்து இருக்காது.

Story first published: Tuesday, May 16, 2023, 19:30 [IST]
Other articles published on May 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+