ஆட்டநாயகனாக தேர்வான கையோடு பர்பிள் கேப்பையும் தனதாக்கினார் ரஷித் கான்!
ஹைதராபாத்: பத்தாவது ஐபில்லில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 3 வீக்கெட்டுகளை வீழ்த்திய சன்ரைசர்ஸ் அணியின் ரஷித் கான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த பவுலருக்கான பர்பிள் கேப்பையும் அவர் தன் வசப்படுத்தினார்.
டாஸ் வென்று ஃபீல்டிங் எடுத்த சன்ரைசர்ஸ் அணி குஜராத் லயன்ஸை பேட்டிங் செய்ய பணித்தது. இதைத்தொடர்ந்து பேட்டிங்கை தொடர்ந்த அந்த அணியை தனது சுழற் பந்து வீச்சால் ரன்களை குவிக்க முடியாதபடி கட்டுப்படுத்தினார் ரஷித் கான். 4 ஓவர்களை வீசிய அவர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

வெறும் 19 ரன்களை மட்டுமே கொடுத்த ரஷித் கான் தனது துரித த்ரோவால் குல்கர்னியையும் ரன் அவுட்டாக்கினார். இதைத்தொடர்ந்து போட்டியின் இறதியில் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. மேலும் சிறந்த பந்து வீச்சாளருக்கான பர்பிள் கேப்பையும் ரஷித் கான் தன் வசமாக்கினார்.
தனது அறிமுகப் போட்டியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 36 ரன்களை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications