Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கலந்து கொள்ள முடியாது.. ஐபிஎல்லிற்கு டாட்டா காட்ட போகும் மூத்த வீரர்கள்.. பின்னணியில் பரபர காரணம்!

சிட்னி: 2021 ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பலர் விளையாடாமல் போவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

2021 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த சீசனுக்கான ஏலம் வரும் பிப்ரவரி 18ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது.

சென்னையில் மினி ஏலம் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு 8 அணிகளும் தங்கள் அணியில் இருந்து ரிலீஸ் செய்யப்பட வேண்டிய வீரர்களின் பட்டியலை வெளியிட்டுவிட்டது.

மோசம்

மோசம்

இப்படிப்பட்ட நிலையில் 2021 ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பலர் விளையாடாமல் போவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு அணிகளில் இருக்கும் மூத்த வீரர்கள் பலர் இந்த சீசனை புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு மூன்று விதமான காரணங்கள் சொல்லப்படுகிறது.

காரணம் 1

காரணம் 1

அதன்படி ஐபிஎல் தொடரில் சரியாக வாய்ப்பு கிடைக்காமல் வெளிநாட்டு வீரர்கள் பலர் உள்ளனர். அணியில் ஏலம் எடுக்கப்பட்டாலும் இவர்களுக்கு ஆடும் அணியில் வாய்ப்பு கிடைப்பது இல்லை. இதனால் தேவையில்லாமல் இந்தியா வந்து வெட்டியாக இருப்பதை மூத்த வீரர்கள் விரும்பவில்லை.

காரணம் 2

காரணம் 2

அடுத்தகட்டமாக ஐபிஎல் தொடருக்கு முன்பாக டெஸ்ட் உலகக் கோப்பை நடக்கும். இதில் கவனம் செலுத்துவதற்காக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா , நியூசிலாந்து வீரர்கள் சிலர் ஐபிஎல்லில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது. இந்த மூன்று நாடுகளுக்கு உலகக் கோப்பை டெஸ்ட் தொடருக்கான பைனலில் ஆட வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது .

காரணம் 3

காரணம் 3

இன்னொரு பக்கம் இந்த வருடம் ஐபிஎல் தொடருக்கு அடுத்த டி 20 உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வேண்டும். ஐபிஎல் தொடரில் விளையாடினால் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த தொடரை பாதுகாப்பு கருதி புறக்கணிக்க வாய்ப்புள்ளது.

நிலைமை எப்படி

நிலைமை எப்படி

டாம் பான்டன் போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடரை புறக்கணிக்க போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டனர். இன்னும் சில வீரர்கள் இதேபோல் அறிவிக்க வாய்ப்புள்ளது. இந்த வருட ஐபிஎல் தொடர் இதனால் பெரிய அளவில் பிரபலம் அடையாமல் போக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Friday, January 29, 2021, 9:33 [IST]
Other articles published on Jan 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+