Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் செட்டாக மாட்டார்.. சிஎஸ்கேவின் எதிர்காலத்தையே மாற்றும் அந்த முடிவு.. தோனியின் மாஸ்டர் பிளான்!

சென்னை: 2021 ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணியில் இளம் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் எடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது. மற்ற வெளிநாட்டு வீரர்களின் பரிந்துரையை தோனி வேண்டாம் என்று கூறியதாக தகவல்கள் வருகிறது.

2021 ஐபிஎல் தொடருக்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தொடரை முன்னிட்டு சிஎஸ்கே அணியில் இருந்து முக்கியமான சில வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சிஎஸ்கே அணி மொத்தமாக வெளியே அனுப்பிய வீரர்களின் பட்டியலும் வெளியாகி உள்ளது.

சிஎஸ்கே வீரர்கள் 6 பேர் இதுவரை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அடிபட்ட புலியான சிஎஸ்கே இந்த தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

எப்படி

எப்படி

இந்த ஏலத்தை முன்னிட்டு தற்போது சிஎஸ்கே அணியில் வெளிநாட்டு வீரர் ஒருவரின் இடம் காலியாக இருக்கிறது. ஒரு வெளிநாட்டு வீரரை சிஎஸ்கே அணி எடுக்க வேண்டும். வாட்சன் சென்றுவிட்டதால் அவரின் இடத்தை சிஎஸ்கே அணி நிரப்ப வேண்டும். இந்த நிலையில் இதற்கான ஆலோசனைகள் நடந்து வருகிறது.

போட்டி

போட்டி

சிஎஸ்கே அணியில் பொதுவாக ஆஸ்திரேலிய அணியின் ஒப்பனர்கள் நன்றாக ஆடுவார்கள். ஹெய்டன், வாட்சன் என்று ஆஸ்திரேலிய அணியின் ஒப்பனர்கள் சிறப்பாக ஆடி உள்ளனர். அதேபோல் சிஎஸ்கே அனுபவம் வாய்ந்த ஆஸ்திரேலியா வீரர்களை மட்டுமே அணியில் எடுக்கும்.

ஆட்டம்

ஆட்டம்

இந்த நிலையில் முதல்முறையாக இளம் ஆஸ்திரேலிய வீரர் ஒருவரை சிஎஸ்கே அணி குறி வைத்து இருக்கிறது. அதன்படி ஆஸ்திரேலியாவின் இளம் அதிரடி புயல் மார்னஸ் லபுசேன் அணியில் எடுக்கப்பட உள்ளார் என்கிறார்கள் . இவர் மீது மற்ற அணிகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாது என்பதால் சிஎஸ்கே எடுக்கும் என்கிறார்கள்.

டெஸ்ட்

டெஸ்ட்

சிஎஸ்கே அணி ஆரோன் பின்சை அணியில் கொண்டு வர நினைத்தது. ஆனால் அவர் கடந்த இரண்டு வருடமாக டி 20 பார்மெட்டில் பெரிய அளவில் அதிரடி எல்லாம் காட்டவில்லை. இதனால் பிஞ்சை அணிக்குள் கொண்டு வரும் எண்ணம் தோனிக்கு இல்லை என்கிறார்கள் .

வருகிறார்

வருகிறார்

பின்ச் வேண்டாம் மார்ன்ஸை எடுக்கலாம். அவரை இன்னும் 2-3 வருடங்கள் சிஎஸ்கேவில் வைத்து இருக்கலாம். நீண்ட நாட்கள் அவர் சிஎஸ்கேவில் ஆட வாய்ப்புள்ளது என்று தோனி கூறியதாக தெரிகிறது. மார்னஸ் போன்ற வீரர்கள் சிஎஸ்கே வந்தால் அணியின் எதிர்காலமே மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, February 13, 2021, 8:54 [IST]
Other articles published on Feb 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+