For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தேர்வுக்குழு செய்த மாஸ்டர் ஸ்டோர்க்.. இந்திய ஒருநாள் அணியில் நீடித்த சிக்கல் தீர்ந்தது..என்ன மாற்றம்

மும்பை : இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியில் நீண்ட நாட்களாக நீடித்த பிரச்சனைக்கு தற்போது தேர்வுக்குழு ஒரு முடிவை எட்டி இருக்கிறதும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஒரு நாள் அணியை தேர்வு குழு அறிவித்துள்ளது.

இதில் ரோகித் சர்மா தலைமையில் 18 பேர் கொண்ட வீரர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்திய அணியில் தற்போது ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், பும்ரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லை.

Master stroke by BCCI Selection committee as India find the solution for middle order

இந்த நிலையில் தோனி ரெய்னாவுக்கு பிறகு இந்திய அணியின் நடு வரிசையில் நீண்ட காலமாக ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. குறிப்பாக யுவராஜ் சிங் பிறகு நம்பர் நான்காவது வீரர் யார் என்று தெரியாமல் இந்திய அணி குழம்பி வந்தது. இதற்கு பல வீரர்கள் இருந்தாலும் அவர்களுக்கு தேர்வுக்குழு வாய்ப்பு வழங்காமல் இருந்தது. இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் அணியின் சஞ்சு சம்சனை தேர்வு குழு அறிவித்திருக்கிறது.

இதன் மூலம் நடு வரிசையில் இருந்த பிரச்சனையை சரி செய்வதற்கான முயற்சியில் தேர்வுக்குழு இறங்கி இருக்கிறது. சஞ்சு சாம்சன் திறமையான வீரராக அறியப்படுபவர். தோனியின் இடத்தை நிரப்ப முடியவில்லை என்றாலும் அவருக்கு சரியான மாற்றாக இருப்பார் என பலரும் கருதினர். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கூட சஞ்சு சாம்சன் தனி ஆளாக நின்று இந்திய அணியை வெற்றியின் அருகே கொண்டு வந்தார்.

ஆனால் தேர்வுக்குழு சம்பந்தமே இல்லாமல் சஞ்சு சாம்சனை ஒருநாள் அணியில் இருந்து அதிரடியாக நீக்கியது. அந்த இடத்திற்கு சூரியகுமார் யாதவ், கே எல் ராகுல் என மாற்று வீரர்கள் வந்தனர். இதில் சூரியகுமார் யாதவும் எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை. ராகுல்,ஒரு இரு போட்டியில் அரைசதம் அடித்தாலும் அவரும் காயம் காரணமாக வெளியேறிவிட்டார்.

இதனால் சஞ்சு சம்சனுக்கு மீண்டும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் தற்போது நடு வரிசையில் சூரிய குமார் யாதவும் சஞ்சு சாம்சனும் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று ஆறாவது வீரராக ஹர்திக் பாண்டியா, ஏழாவது வீரராக ஜடேஜா விளையாடுவார். இதனால் இந்திய அணியின் நடுவரிசை பலம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது. சஞ்சு சாம்சன் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அணியில் தனக்கு என நிரந்தர இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Story first published: Friday, June 23, 2023, 17:17 [IST]
Other articles published on Jun 23, 2023
English summary
Master stroke by BCCI Selection committee as India find the solution for middle order தேர்வுக்குழு செய்த மாஸ்டர் ஸ்டோர்க்.. இந்திய ஒருநாள் அணியில் நீடித்த சிக்கல் தீர்ந்தது..என்ன மாற்றம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+