Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை ரசிகர்களின் ஓவர் வாய்க்கு.. டெல்லி வைத்த "ஆப்பு" - ஒரு ஓவர் கூட உருப்படியா அடிக்கல

ஷார்ஜா: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை அணி வெறும் 129 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (அக்.2) டபுள் ஹெட்டர்ஸில், முதல் போட்டியாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்டை பவுலிங்கை தேர்வு செய்ய, மும்பை 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களே எடுத்திருக்கிறது.

அசத்திய அக்ஷர்

அசத்திய அக்ஷர்

இதில், கேப்டன் ரோஹித் ஷர்மா வெறும் 7 ரன்களில் ஆவேஷ் கான் ஓவரில் கேட்ச்சாக, அதிலிருந்தே மும்பை பேட்ஸ்மேன்களால் ரன்கள் அடிக்கவே முடியவில்லை. டி காக் 19 ரன்களில் அக்ஷர் படேல் ஓவரில் கேட்ச்சாக, சவுரப் திவாரி 15 ரன்களில் அக்ஷர் ஓவரில் அவுட்டானார். கடந்த போட்டிகள் போல் அல்லாமல், இந்த மேட்சில் தனது பழைய ஃபார்மை சூர்யகுமார் யாதவ் வெளிப்படுத்தினாலும், 33 ரன்களே அடிக்க முடிந்தது. அவரும் அக்ஷர் ஓவரில் கேட்ச்சாகி வெளியேறினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பொல்லார்ட் 6 ரன்களில் நோர்க்யா ஓவரில் போல்டானார்.

க்ளீன் போல்ட்

க்ளீன் போல்ட்

இறுதியில், பாண்ட்யா பிரதர்ஸ் களத்தில் இருந்தாலும் அவர்களால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஹர்திக் 17 ரன்களில், ஆவேஷ் கானின் ஆவேச பந்துவீச்சில் ஸ்டெம்ப்புகள் சிதற வெளியேறினார். இறுதியில், க்ருனால் பாண்ட்யா 13 ரன்கள் எடுக்க மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது மும்பை. டெல்லி தரப்பில் அக்ஷர் படேல் 4 ஓவர்கள் வீசி, 21 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்றைய நாள் அக்ஷர் படேல் நாளாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை. அதேபோல், ஆவேஷ் கானும் 4 ஓவர்கள் வீசி, 15 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பிளே ஆஃப் வாய்ப்பு?

பிளே ஆஃப் வாய்ப்பு?

மும்பை இந்தியன்ஸ் 11 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றிப் பெற்றிருக்கிறது. 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் தோல்வி அடைந்தால், அந்த அணி 8வது தோல்வியை பதிவு செய்ய நேரிடும். டெல்லி வெற்றிப் பெற்றால் பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் ஏக குஷியில் ஆட்டம் போடும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம், மும்பை அணி தோல்வி அடையும் பட்சத்தில், அது இத்தொடரில் இருந்து அந்த அணியை வெளியேற வைக்கும் முக்கிய தருணமாகவும் அமையலாம்.

சிறப்பான நாளில்லை

சிறப்பான நாளில்லை

இந்த போட்டியில் மற்றொரு முக்கிய விஷயமாக நாம் பார்க்க வேண்டியது அஷ்வினின் பந்துவீச்சு தான். 4 ஓவர்கள் வீசி, 1 விக்கெட் வீழ்த்தி 41 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். எல்லா பவுலர்களுக்கும் ஒரு Off Day வரும். அதுபோல், அஷ்வினுக்கு இன்றைய நாள் சிறப்பானதாக அமையவில்லை. அவரது கடைசி ஓவரில் கூட 2 சிக்ஸர்கள் விளாசப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆட்டத்தின் கடைசி ஓவரும் அதுதான்.

Story first published: Saturday, October 2, 2021, 19:15 [IST]
Other articles published on Oct 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+