ம்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பாதி முடிவடைந்துவிட்டது. ஆனால் 5 முறை சாம்பியனான மும்பை அணி 7 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளுடன் தற்போது 9வது இடத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பும்ரா இல்லாத நிலையில், ஜோப்ரா ஆர்ச்சரும் தற்போது காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது மாற்று வீரரை தேடி ஒப்பந்தம் செய்துள்ளது.

கடந்த சீசனில் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்து, வேண்டாம் என நீக்கிய கிறிஸ் ஜார்டனை தான் திற்போது மும்பை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. கிறிஸ் ஜார்டனால் தான், கடந்த சீசனில் சென்னை அணி தோல்வியை தழுவியது.
எப்போதும் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் தோனியே, வேண்டாம் என்று தள்ளி வைத்தவர் தான் கிறிஸ் ஜார்டன். காரணம், பேட்ஸ்மேன்கள் தான் அரைசதம் அடித்து பார்த்து இருப்போம். ஆனால் இந்த தங்கம், பந்துவீச்சில் அரைசதம் அடிக்கும். அதாவது 4 ஓவரில் 50 ரன்களை விட்டு கொடுக்கும்.
இதனால் தான் சிஎஸ்கே அணி இவரை நீக்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் நல்ல பவுலர்களே அதிக ரன்களுக்கு செல்வார்கள். இப்படி இருக்கும் சூழலில் கிறிஸ் ஜார்டனை சேர்த்து இருப்பது, மும்பை அணியை மேலும் பரிதாபமான நிலைக்கு தான் கொண்டு செல்லும். எத்தனையோ வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ள நிலையில், கிறிஸ் ஜார்டன் தேர்வு, அவரது ரசிகர்களையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.