For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் போட்டிகளிலிருந்து பொலார்ட் ஓய்வு.. மும்பை இந்தியன்ஸ் முடிவால் ஓய்வை அறிவித்தார்

மும்பை : ஐபிஎல் தொடரில் பங்கேற்று உலக புகழ் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பொலார்ட், இனி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியால் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட பொலார்ட், கடந்த 12 ஆண்டுகளாக அந்த அணிக்காக மட்டுமே விளையாடி வந்தார்.

இந்த நிலையில், கடந்த சீசனில் மும்பை அணி பொலார்டை 6 கோடி ரூபாய்க்கு தக்க வைத்து கொண்டது.

பொலார்ட் 2022

பொலார்ட் 2022

கடந்த சீசனில் மும்பை அணி கடைசி இடத்தை பிடித்தது. இதற்கு முக்கிய காரணம், பொலார்ட் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தாது தான் என்று ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர். கடந்த சீசனில் அவர் 11 போட்டியில் விளையாடி 144 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

விடுவிக்க திட்டம்

விடுவிக்க திட்டம்

தற்போது மும்பை அணியில் பிராவீஸ், டிம் டேவிட் போன்ற அதிரடி வீரர்கள் இடம்பெற்றுள்ளதால், பொலார்ட்க்கு தேவை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மும்பை அணி பொலார்டை விடுவித்து, ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கேமிரான் கிரினை கைப்பற்ற முடிவு எடுத்துள்ளது. எனினும் மும்பை அணியின் இந்த முடிவு பொலார்ட்க்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

ஓய்வு

ஓய்வு

இதனால் மும்பை அணியின் மீதுள்ள விஸ்வாசம் காரணமாக, இனி ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக பொலார்ட் அறிவித்துள்ளார். பொலார்டின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொலார்டை விடுவித்து, மீண்டும் குறைந்த விலையில், அவரை அணியில் எடுக்க மும்பை அணி திட்டமிட்டது. ஆனால், அது அவருக்கு கௌரவ பிரச்சினை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார்.

மும்பை அணியின் நட்சத்திரம்

மும்பை அணியின் நட்சத்திரம்

பொலார்ட் வருகைக்கு பிறகு தான் மும்பை அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக 189 போட்டிகளில் விளையாடிய பொலார்ட், 3412 ரன்களை குவித்துள்ளார். பந்துவீச்சில் 69 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதுவரை ஐபிஎல் தொடரில் 223 சிக்சர்களை பொலார்ட் விளாசி இருக்கிறார். இனி பொலார்ட் போன்ற ஒரு வீரரை ஐபிஎல் தொடரில் காண்பது மிக அரிது தான்

Story first published: Tuesday, November 15, 2022, 14:17 [IST]
Other articles published on Nov 15, 2022
English summary
MI Star Player Kieron Pollard Retires from IPL Tournament
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+