
25 போட்டிகள்
ஐபிஎல் 2021 தொடரின் 25 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்றைய 26வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதவுள்ளன. ஆர்சிபி தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் இன்றைய போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

நாளைய தினம் மோதல்
இந்நிலையில் நாளைய தினம் டெல்லியில் நடைபெறவுள்ள 27வது போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. இதில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதுவரை விளைடியுள்ள 6 போட்டிகளில் 5ல் வெற்றிப் பெற்றுள்ளது சிஎஸ்கே.

ரோகித் குற்றச்சாட்டு
இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 3ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ். ஆனால் சென்னை பிட்ச் தங்களது அணிக்கு மிகவும் கடுமையாக இருந்ததாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். இதற்கேற்றாற்போல நேற்றைய தினம் டெல்லியில் நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.

5 போட்டிகளில் வெற்றி
இந்நிலையில் நாளைய தினம் டெல்லியில் மும்பை மற்றும் சிஎஸ்கே இடையிலான போட்டி நடைறெவுள்ளது. இந்த போட்டி மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கேவின் பேட்டிங் மற்றும் பௌலிங் லைன்-அப் மிகவும் சிறப்பாக உள்ளது. கடந்த போட்டிகளில் இதை பார்க்க முடிந்தது.

சொதப்பும் மிடில் ஆர்டர்
ஆனால் மும்பை அணியின் மிடில் ஆர்டர் இந்த தொடரில் சற்றே சொதப்பி வருகிறது. நேற்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் துவக்க வீரர்களே அணியின் வெற்றியை சிறப்பாக முடித்து வைத்ததால் மிடில் ஆர்டர் வீரர்கள் விளையாடுவதற்கு அவசியம் இல்லாமல் போனது.

வலிமைப்படுத்த வேண்டியகட்டாயம்
புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள சிஎஸ்கே தன்னுடைய பலத்தை போட்டிக்கு போட்டி மேலும் வலிமைப்படுத்தி வரும் நிலையில், நாளைய போட்டியில் தன்னுடைய மிடில் ஆர்டரை சிறப்பாக வடிவமைத்து களமிறங்க வேண்டிய கட்டாயம் மும்பை அணிக்க உள்ளது.

சிஎஸ்கே சிறப்பான பௌலர்கள்
மேலும் சிஎஸ்கேவின் ஜடேஜா, சாம் குர்ரன் ஆகிய பௌலர்களும் மும்பைக்கு எதிராக தங்களது பலத்தை நிரூபிக்க காத்திருக்கின்றனர். அணியில் எந்த மாற்றமும் நிகழ்த்தப்படாது என்று எதிர்பார்க்கலாம். இதேபோல மும்பையின் பும்ரா, போல்ட் மற்றும் நாதன் ஆகியோர் சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தி வருவதால் அவர்களது பந்துவீச்சை சமாளிக்க சிஎஸ்கே தயாராக வேண்டும்.


Click it and Unblock the Notifications