Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திட்டம் போட்டு கவிழ்த்த ரோஹித் சர்மா.. அதிரடி காட்ட முடியாமல் தடுமாறிய தோனி, கேதார் ஜாதவ்!!

Recommended Video

ரெய்னாவின் விக்கெட் எடுக்க பொல்லார்ட் பிடித்த அற்புத கேட்ச்

மும்பை : 2019 ஐபிஎல் தொடரில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் வீழ்ந்தது. தான் சந்தித்த முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த சென்னை அணி, மும்பை அணியின் பலமான பந்துவீச்சிடம் சரணடைந்தது.

1
45771

இந்தப் போட்டியில் மும்பை நிர்ணயித்த 171 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வந்தது சென்னை. துவக்கத்தில் விக்கெட்கள் வீழ்ந்தாலும், இடையே கேதார் ஜாதவ் - தோனி சேர்ந்து கூட்டணி அமைத்தனர்.

வெற்றிக் கூட்டணி

வெற்றிக் கூட்டணி

இவர்கள் கூட்டணி பல போட்டிகளை வென்று கொடுத்த கூட்டணி என்பதால், இந்தப் போட்டியிலும் இவர்கள் வெற்றி தேடித் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இருவருமே நிதானமாகவே ரன் சேர்த்தனர்.

ரன் குவிப்பில் தடுமாற்றம்

ரன் குவிப்பில் தடுமாற்றம்

தோனி 21 பந்துகளை சந்தித்து 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். கேதார் ஜாதவ் அரைசதம் அடித்தாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 110-ஐ தாண்டவில்லை. 54 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து வெளியேறினார் அவர்.

கட்டுப்படுத்தியது எப்படி?

கட்டுப்படுத்தியது எப்படி?

இந்த இரண்டு பேட்ஸ்மேன்களையும் கட்டுப்படுத்தியது எப்படி என்ற ரகசியத்தை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா வெளியிட்டார். அவர் கூறியது இது தான் - ஜாதவ், தோனி இருவரும் சுழற் பந்துவீச்சை எளிதாக சமாளித்து ரன் குவிப்பார்கள்.

2 சுழற் பந்துவீச்சாளர்கள்

2 சுழற் பந்துவீச்சாளர்கள்

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியில் ராகுல் சாஹர், க்ருனால் பண்டியா என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் ஆடினர். இருவரும் தலா இரண்டு ஓவர்கள் மட்டுமே பந்து வீசினர். அவர்கள் சிறப்பாக பந்துவீசி இரண்டு ஓவர்களுக்கு 11, 12 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தனர்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

எனினும், அவர்களுக்கு நான்கு ஓவர்களும் பந்து வீச வாய்ப்பு கொடுக்கவில்லை. அதற்கு காரணம், ஜாதவ், தோனி சுழற் பந்துவீச்சில் ரன் குவிப்பார்கள் என்பதே. அதே சமயம், மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது.

அசத்தல் வேகக் கூட்டணி

அசத்தல் வேகக் கூட்டணி

மும்பை இந்தியன்ஸ்-இல் ஆஸ்திரேலிய வீரர் பெஹ்ரண்டாப், மலிங்கா, பும்ரா, ஹர்திக் பண்டியா என நால்வரும் பலம் வாய்ந்த வேகக் கூட்டணியாக விளங்கினர். இவர்கள் தங்கள் நான்கு ஓவர்களையும் முழுமையாக வீசி முடித்தனர். இவர்கள் தான் தோனி, ஜாதவ் ரன் குவிக்காமல் கட்டுப்படுத்தினர் என்றார் ரோஹித் சர்மா. மலிங்கா 3, ஹர்திக் பண்டியா 3, பெஹ்ரண்டாப் 2 விக்கெட்கள் வீழ்த்தினர் என்பது குறிப்பிடதக்கது.

Story first published: Thursday, April 4, 2019, 10:58 [IST]
Other articles published on Apr 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+