Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

GT vs MI: என்னையா டீம்ல சேர்க்குல.. ரோகித்தை பழிவாங்கிய முகமது சிராஜ்

அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டம் இழந்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதை அடுத்து களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கினார்.

ரோகித் சர்மா சர்வதேச t20 போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ரோகித் சர்மா இறுதிப்போட்டியை தவிர பெரிய அளவில் சாதிக்கவில்லை. ரோஹித் சர்மாவின் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது.

இந்த தருணத்தில் ஐபிஎல் தொடரில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் ரோஹித் சர்மா இருக்கிறார். இந்த சூழலில் சிஎஸ்கே அணிக்கு எதிரான முதல் போட்டியில் ரோகித் சர்மா டக் அவுட் ஆனார். இதனால் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா அதிரடி காட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்த நிலையில் சிராஜ் வீசிய முதல் ஓவரில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்தில் ரோகித் சர்மா அடுத்தடுத்து பவுண்டரி விளாசி அசத்தினார். இதனால் ரோஹித் சர்மா இன்று பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த பந்தில் சிராஜ் அற்புதமான ஒரு கம் பேக்கை கொடுத்து ரோகித் சர்மாவை கிளீன் போல்ட் ஆக்கினார்.

ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு சிராஜ் பெரிய அளவு கொண்டாடினார்ம் இதற்கு காரணம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முகமது சிராஜை ரோகித் சர்மா சேர்க்கவில்லை. வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் சிராஜ் சரியாக விளையாடுவதில்லை என்று காரணம் வேறு சொன்னார். இது சிராஜ்க்கு மனதளவில் காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ரோகித் சர்மாவை பழிவாங்க வேண்டும் என்ற உத்வேகத்தில் இருந்த சிராஜ் இன்று ரோகித் சர்மாவை கிளீன் போல்டாக்கி தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். இதேபோன்று ரியான் ரிக்கல்டன் ஆறு ரன்கள் எடுத்திருந்தபோது அவரும் சிராஜ் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆக்கினார்.

Story first published: Saturday, March 29, 2025, 22:34 [IST]
Other articles published on Mar 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+