For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2008 முதல் 2025 வரை.. மும்பை அணியோட கன்சிஸ்டன்சி வரலாறு தெரியுமா.. 6வது கோப்பையை எடுத்து வைங்க!

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் 7வது முறையாக மும்பை அணி தொடர்ந்து 5 போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளது. ஐபிஎல்லில் 5 போட்டிகளை தொடர்ச்சியாக வென்ற தொடரில், மும்பை அணி இதுவரை 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதனால் 6வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 5வது போட்டியை மும்பை அணி வென்றுள்ளது.

MI vs LSG From 2008 to 2025 Mumbai Indians winning the 5 Matches Consecutively for the 7th Time in the IPL History

2வது இடத்தில் மும்பை

இந்த வெற்றியின் மூலமாக மும்பை அணி புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதனால் எஞ்சியுள்ள 4 போட்டிகளில் 2ல் வென்றாலே, மும்பை அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்று நிலை உருவாகி இருக்கிறது. அதேபோல் மும்பை அணியின் அத்தனை வீரர்களும் ஃபார்முக்கு வந்துள்ளனர்.

மும்பை வரலாறு

இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மும்பை அணி தொடர்ச்சியாக 7வது முறையாக 5 போட்டிகளில் வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. 2008ஆம் ஆண்டு மும்பை அணி 6 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றது. அந்த தொடரில் 5வது இடத்தில் நிறைவு செய்தது. இதன்பின் 2010ஆம் ஆண்டு தொடர்ந்து 5 போட்டிகளில் வென்று இறுதிப்போட்டி வரை முன்னேறியது.

தொடர் வெற்றிகள்

இதன்பின் 2013ஆம் ஆண்டு தொடர்ந்து 5 போட்டிகளில் வென்ற மும்பை, முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அதேபோல் 2015ஆம் ஆண்டு 5 போட்டிகளில் தொடர்ந்து வென்ற மும்பை அணி, 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன்பின் 2017ஆம் ஆண்டு தொடர்ந்து 6 போட்டிகளில் வென்ற மும்பை அணி, 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

4 முறை சாம்பியன் பட்டம்

அதேபோல் 2020ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வென்ற மும்பை அணி, 5வது முறையாக சாம்பியனாகியது. இதன்பின் கடந்த 4 சீசன்களாக மும்பை அணியால் தொடர் வெற்றியை லீக் சுற்றில் வெல்ல முடியவில்லை. தற்போது இந்த சீசனில் தொடர்ந்து 5 போட்டிகளில் வென்று கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்றுக்குள் ஒரு காலினை எடுத்து வைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

6வது கோப்பை லோடிங்

இதனால் மும்பை அணி 6வது முறையாக கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அதற்கேற்ப ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், வில் ஜாக்ஸ், ரிக்கல்டன், திலக் வர்மா, பும்ரா, போல்ட், தீபக் சஹர், ஹர்திக் பாண்டியா, நமன் திர் என்று அனைத்து வீரர்களும் ஃபார்முக்கு வந்துள்ளனர்.

Story first published: Sunday, April 27, 2025, 21:51 [IST]
Other articles published on Apr 27, 2025
English summary
MI vs LSG: From 2008 to 2025, Mumbai Indians winning the 5 Matches Consecutively for the 7th Time in the IPL History
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+