MI vs PBKS: ரோஹித்துக்கு என்னாச்சு? ஹர்திக் பாண்டியா சொன்ன அதிர்ச்சித் தகவல்.. ஸ்ரேயாஸ் டாஸ் வெற்றி
மும்பை: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ரோஹித் சர்மா விலகல்
டாஸ் போட வந்த மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்து கொண்டார். நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா தசைநார் காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவர் முழு உடல் தகுதியைப் பெற இன்னும் 2 போட்டிகள் வரை ஆகும் என்று ஹர்திக் தெரிவித்தார். மேலும், மிட்செல் சான்ட்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அணியில் இடம்பெறவில்லை. இவர்களுக்குப் பதிலாக அதிரடி வீரர் குயின்டன் டி காக் அணிக்குள் திரும்பியுள்ளார். மயங்க் ராவத் மும்பை அணிக்காக அறிமுக வீரராகக் களம் இறங்குகிறார்.

கேப்டன்கள் பேச்சு:
டாஸ் நிகழ்வில் பேசிய ஹர்திக் பாண்டியா, "நாங்களும் முதலில் பந்துவீசவே விரும்பினோம். ஆனால் டாஸ் தோற்றது ஒரு விதத்தில் நல்லதுதான். கடந்த போட்டியில் கடைசி ஓவர்களில் அதிக ரன்களை வாரிக் கொடுத்தோம். அதைச் சரிசெய்யத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
மறுபுறம் உற்சாகமாகக் காணப்பட்ட பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், "தொடர் வெற்றிகளால் அணியின் சூழல் மிகச் சிறப்பாக உள்ளது. வீரர்கள் அனைவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படுகின்றனர். ஆடுகளம் உலர்வாகக் காணப்பட்டாலும், பனிப்பொழிவு காரணமாகப் போகப்போக பேட்டிங்கிற்குச் சாதகமாக மாறும். எனவே அதே அணியுடன் களம் இறங்குகிறோம்" என்றார்.
ஆடுகளம் எப்படி?
வான்கடே மைதானம் பேட்டிங்கிற்குச் சொர்க்கமாகத் திகழும். ஆடுகளத்தில் லேசான புற்கள் இருப்பதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆரம்பத்தில் கூடுதல் வேகம் கிடைக்கும். பவுண்டரி எல்லைகள் மிகச் சிறியதாக (61 மீட்டர் மற்றும் 67 மீட்டர்) இருப்பதால், இரு அணிகளும் சிக்ஸர் மழை பொழியக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விளையாடும் வீரர்கள் விவரம்
மும்பை இந்தியன்ஸ்: குயின்டன் டி காக், ரியான் ரிக்கெல்டன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், நமன் தீர், மயங்க் ராவத், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.
பஞ்சாப் கிங்ஸ்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், கூப்பர் கொனாலி, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹால்.


Click it and Unblock the Notifications