For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ஆடிய 20 வயதான திலக் வர்மா..CSK தவறவிட்ட கதை தெரியுமா? இந்திய அணியில் இடம்?

பெங்களூரு : ஐபிஎல் தொடர் எப்போதுமே பல சூப்பர் ஸ்டார்களை இந்திய கிரிக்கெட் அணிக்கு கொடுத்திருக்கிறது. அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கிறார் 20 வயதான திலக் வர்மா. இவர் ஏற்கனவே அண்டர் 19 உலககோப்பையில் இந்திய அணிக்கக விளையாடி இருக்கிறார்.

கடந்த சீசனில் திலக் வர்மா மும்பை அணிக்காக 14 இன்னிங்ஸ் விளையாடி 397 ரன்கள் சேர்த்தார். அப்போதே 19 வயதில் இந்த பையன் சூப்பராக விளையாடுகிறாரே என்று பலரும் பாராட்டி இருக்கிறாரர். ஆனால் அது வெறும் டிரைலர் தான். மெயின் பிக்சர் இப்போ காட்டுகிறேன் என்று மிரட்டி இருக்கிறார் திலக் வர்மா.

MI Young batsman Tilak varma showcase his MS Dhonis helicopter shot

மும்பை அணியின் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், கொஞ்சம் கூட பதற்றம் இல்லாமல் கவுண்டர் அட்டாக் இன்னிங்சை வெளிப்படுத்தினார். இது சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங்கை ரசிகர்களுக்கு நினைவுப்படுத்தியது.

பந்துவீச்சாளர்கள் வீசும் பந்தை முன்பே கணித்து, அதற்கு ஏற்றார் போல் தனது ஷாட்டை வடிவமைத்து சிக்சர்களையும், பவுண்டரிகளையும் அள்ளினார். விக்கெட்டுகள் விழும் போது எல்லாம், கெஞ்சம் கூட பதற்றம் அடையாமல் திலக் வர்மா இரண்டு பார்ட்னர்ஷிப்களை அமைத்தார். இதற்கு எல்லாம் மேல், கடைசியில் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ஒன்றை ஆடி பந்தை சிக்சருக்கு அடித்தார்.

இப்படி திறமையான வீரரை ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே தான் குறிவைத்தது என்பது தமிழக ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றத்தை கொடுத்திருக்கும். மெகா ஏலத்தில் 1.6 கோடி ரூபாய் வரை சிஎஸ்கே கேட்டது.ஆனால் கூடுதலாக ஒரு பத்து லட்சம் ரூபாய் கேட்டு மும்பை அணி திலக் வர்மாவை தட்டிச் சென்றது.

தற்போது இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, ரிஷப் பண்ட் இல்லாததால், டாப் ஆர்டரில் ஜடேஜா தவிர வேறு யாரும் இல்லை. இதனால் திலக் வர்மா, இந் ஐபிஎல் தொடரில் சாதித்தால், இந்திய அணியில் கூட இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Sunday, April 2, 2023, 22:32 [IST]
Other articles published on Apr 2, 2023
English summary
MI Young batsman Tilak varma showcase his MS Dhonis helicopter shot தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ஆடிய 20 வயதான திலக் வர்மா..CSK தவறவிட்ட கதை தெரியுமா? இந்திய அணியில் இடம்?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+