Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-யை இப்படியா அசிங்கப்படுத்துறது.. ‘ச்ச ச்ச’.. முன்னாள் வீரரின் கருத்தால் கொந்தளித்த ரசிகர்கள்!

ஜமைக்கா: ஐபிஎல் தொடர் குறித்து முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் மிக மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.

உலகில் மிகவும் பிரபலமான உள்நாட்டு டி20 தொடர்களில் ஐபிஎல் முக்கிய இடம் வகிக்கிறது. மேலும் பெரிய அளவில் பணம் புரளும் இடமாகவும் உள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை ஒரு கிரிக்கெட் ஆகவே தான் பார்க்கவில்லை என்றும் மதிக்கவில்லை என்றும் ஹோல்டிங் கடுமையாக சாடியுள்ளார்.

சிறந்த வர்ணனையாளர்

சிறந்த வர்ணனையாளர்

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் ஹோல்டிங், தனது அசுர வேக பந்துவீச்சினால் பல முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடித்தவர். இவர் தற்போது உலகின் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளுக்கும், உள்நாட்டு தொடர்களுக்கும் கமெண்டேட்டராக உள்ளார். ஆனால் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டிக்கு கூட வர்ணனை செய்ய வந்ததில்லை. இந்நிலையில் டி20 கிரிக்கெட் மீதான தனது பார்வையை விவரித்துள்ளார்.

டி20 போட்டிகள்

டி20 போட்டிகள்

அதில் பேசிய அவர், டி20 போட்டிகளானது உலக கிரிக்கெட்டில் ஒரு கறை போன்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களுக்கு தேசத்திற்காக விளையாடுவதை விட பல நாடுகளில் நடக்கும் உள்நாட்டு டி20 தொடர்கள் தான் முக்கியமாக உள்ளது. அதற்கு காரணம் வெஸ்ட் இண்டீஸ் நாடானது ஏழை நாடாகும். அங்கு இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியாவில் கொடுப்பது போன்ற அளவிலான ஊதியம் வழங்கப்படமாட்டாது. இதனால் ஒருசில வாரங்களில் 800,000 டாலர்கள் வரை கிடைப்பதால் டி20 லீக் தொடருக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் எனத்தெரிவித்துள்ளார்.

மோசமான விமர்சனம்

மோசமான விமர்சனம்

ஐபிஎல் தொடரில் ஏன் கமெண்டரி செய்வதில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த மைக்கேல் ஹோல்டிங், நான் கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டும் தான் கமெண்டரி கொடுப்பேன் என மோசமாக விமர்சித்துள்ளார். அதாவது ஐபிஎல் போட்டிகளை அவர் ஒரு கிரிக்கெட்டாக கூட மதிக்கவில்லை என சாடியுள்ளார்.

ரசிகர்கள் கொந்தளிப்பு

ரசிகர்கள் கொந்தளிப்பு

உலகளவில் உள்ள வீரர்கள் பலர் தங்களது ஃபார்மை நிரூபித்துக்கொள்ளவுன், தங்களது ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ளவும் ஐபிஎல் தொடர் உதவி வருகிறது. ஆனால் அப்படிபட்ட போட்டியை கிரிக்கெட்டாகவே மதிக்கவில்லை என ஹோல்டிங் எப்படி கூறலாம் என கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

Story first published: Monday, June 28, 2021, 20:22 [IST]
Other articles published on Jun 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+