Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேக்ஸ்வெல்லுக்கு இவ்ளோ பிரச்னை இருந்துச்சா.. ஆர்சிபியில் சிறப்பாக ஆட காரணம் இதுதான்.. வெளியான உண்மை!

சென்னை: இந்தாண்டு ஐபிஎல்-ல் மேக்ஸ்வெல் தொடர்ந்து அதிரடி காட்டுவதன் பின்னணியை உடைத்துள்ளார் முன்னாள் வீரர் மைக்கெல் வாகன்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சிறப்பாக ஆடி வருகிறார்.

சென்னையில் இன்று நடைபெற்று வரும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அவர் அரைசதம் அடித்து மீண்டும் அசத்தினார்.

 திணறல்

திணறல்

அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல் 2017 ஐபிஎல் சீசனுக்கு பிறகு மேக்ஸ்வெல் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் அணிகள் அவரை விடுவித்து வந்தது. டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் என அணிகள் மாறினார். 2020 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு விளையாடிய மேக்ஸ்வெல் வெறும் 108 ரன்கள் தான் அடித்தார்.

தொடர்ந்து அதிரடி

தொடர்ந்து அதிரடி

ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி ரூ. 14.25 கோடிக்கு வாங்கப்பட்ட மேக்ஸ்வெல் தொடர்ந்து அதிரடி காட்டி வருகிறார். இந்த சீசனில் இன்று நடைபெற்று வரும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியுடன் சேர்த்து 3 போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் மூன்றிலும் 30+ ஸ்கோர் அடித்துள்ளார். 2014ம் ஆண்டுக்கு பிறகு மேக்ஸ்வெல் இதனை செய்கிறார்.

ரசிகர்களுக்கு வியப்பு

ரசிகர்களுக்கு வியப்பு

இன்றைய போட்டியில் 2வது விக்கெட்டிற்கு களமிறங்கிய க்ளென் மேக்ஸ்வெல் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். 49 பந்துகளை சந்தித்த அவர் 78 ரன்களை விளாசினார். இதில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களும் அடங்கும். இதனால் மேக்ஸ்வெல்-ன் ஃபார்ம் குறித்து அனைவரும் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

ஆர்சிபி அணி

ஆர்சிபி அணி

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மைக்கெல் வாகன், மேக்ஸ்வெல் ஒரு சிறந்த வீரர். ஐபிஎல்-ல் அவரால் நிலையான ஆட்டத்தை காட்ட முடியவில்லை. காரணம் அவருக்கு ஏற்றார் போல அணிகள் அமையவில்லை. ஆனால் ஆர்சிபி அவருக்கு ஏற்ற அணியாகும். ஏனென்றால் இந்த அணியில் விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோர் அவருக்கு முன்னர் உள்ளனர்.

Story first published: Sunday, April 18, 2021, 18:10 [IST]
Other articles published on Apr 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+