Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரச்னையே அங்க தான் இருந்தது... ஐபிஎல்-க்குள் கொரோனா நுழைந்தது அப்படிதான்.. மனம் திறந்த மைக் ஹசி!

சென்னை: கொரோனாவை தான் எதிர்கொண்ட விதம் குறித்து சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி மனம் திறந்துள்ளார். மேலும் பிரச்னை எங்கு தொடங்கியது என்றும் உண்மையை உடைத்துள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்தன் காரணமாக 14வது ஐபிஎல் தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதலில் கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்திக்கு உறுதியான கொரோனா அடுத்தடுத்து சிஎஸ்கே, ஐதராபாத், டெல்லி அணிகளுக்கும் பரவியிருக்கிறது.

சென்னை

சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதலில் பவுலிங் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜிக்கு தொற்று உறுதியான நிலையில் அடுத்ததாக பேட்டிங் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரருமான மைக் ஹசிக்கும் பரவியது. இதனையடுத்து அவர் டெல்லியில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

நாடு திரும்பினார்

நாடு திரும்பினார்

சென்னையில் கிட்டத்தட்ட 2 வார காலமாக சிகிச்சைப்பெற்று வந்த மைக் ஹசி கடந்த மே 14ம் தேதி குணமடைந்தார். பின்னர் மே 16ம் தேதி அங்கிருந்து பயணிகள் விமானம் மூலம் ஆஸ்திரேலிய சென்றடைந்த ஹசி, தற்போது சிட்னியில் உள்ள தனியார் ஹோட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தான் கொரோனாவை எதிர்கொண்டது குறித்து மனம் திறந்துள்ளார்.

புதிய மைதானங்கள்

புதிய மைதானங்கள்

ஐபிஎல் தொடர் முதலில் சென்னை மற்றும் மும்பை மைதானங்களில் நடைபெற்ற போது எந்தவொரு பிரச்னையும் ஏற்படவில்லை. போட்டிகள் அடுத்த 2 மைதானங்களுக்கு மாற்றப்பட்ட போதுதான் பபுள் உடைந்திருக்கும் என கூறப்படுகிறது. சிஎஸ்கே பயிற்சியாளர் மைக் ஹசியும் மும்பையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் போன போதுதான் ரிஸ்க் இருந்தது எனக்கூறியுள்ளார்.

அங்கு தான் பிரச்சினை

அங்கு தான் பிரச்சினை

இதுகுறித்து பேசிய அவர், மும்பை பபுளில் இருந்தவரை பாதுகாப்பாக இருந்தோம். மும்பையில் இருந்து டெல்லிக்கு மாறும் போதுதான் பிரச்சினை தொடங்கியது. பபுளில் இல்லாத மைதான ஊழியர்கள், விமான நிலைய ஊழியர்கள், விமான ஓட்டிகள், பாதுகாப்பு ஊழியர்கள் என பலருடன் தொடர்பு ஏற்பட்டதால் பபுளில் ரிஸ்க் ஏற்பட்டது என மைக் ஹசி கூறியுள்ளார்.

கொரோனா தாக்கிய போது

கொரோனா தாக்கிய போது

எனக்கு முதல் பரிசோதனையில் வீரியம் குறைவான பாதிப்பே இருந்தது. இதனால் 2வது பரிசோதனையில் நெகட்டீவ் என முடிவு வரும் என்று பெரும் நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் அதிலும் பாசிட்டீவ் என வந்தது. அப்போது தான் எனக்குள் இருந்த கொரோனா அறிகுறிகளை உணர்ந்தேன். நான் பேருந்தில் பவுலிங் கோச் பாலாஜியுடன் தான் அமர்ந்தேன். அவருக்கு கொரோனா உறுதி என்றால் நானும் நிச்சயம் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளேன் என்பதை உணர்ந்தேன்.

பயப்படவில்லை

பயப்படவில்லை

முடிவு தெரிந்தவுடன் ' எனக்கா இதுபோன்று நடக்க வேண்டும் என்று எண்ணினேனே தவிர மூச்சு திணறல், உடல்நலக்குறைவுகள் குறித்து கவலைப்படவில்லை. உடலில் சிறிது தொந்தரவுகள் இருந்தது அவ்வளவுதான். உயிர் பயம் வரும் அளவிற்கு நான் எதையும் உணரவில்லை என தெரிவித்தார்.

Story first published: Wednesday, May 19, 2021, 16:30 [IST]
Other articles published on May 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+