ஹர்பஜனை விட்டுவிடுங்கள்...இந்த ப்ளேயரே போதும்..தோனிக்கே பிடிக்கும்..சி.எஸ்.கேவுக்கு கம்பீர் அட்வைஸ்
சென்னை: 2021 ஐபிஎல் போட்டியில் சி.எஸ்.கே அணியில் ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக இங்கிலாந்து வீரர் ஒருவரை எடுக்கலாம் என கவுதம் கம்பீர் அட்வைஸ் தெரிவித்துள்ளார்.
2021 ஐபிஎல் தொடர் இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்க உள்ளது. இதற்காக அணிகள் தாங்கள் வெளியேற்றும் வீரர்கள் மற்றும் தக்க வைக்கும் வீரர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.
வீரர்களுக்கான ஏலம் நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சென்னை அணிக்கு முக்கியமாக தேவைப்படும் வீரர் குறித்து கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

சி.எஸ்.கே
இந்த ஐபிஎல் தொடருக்கு சென்னை அணி யாரை எல்லாம் ஏலம் எடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. சிஎஸ்கே அணி இந்த முறை பெரும்பாலும் ஆல் ரவுண்டர்களைத்தான் குறி வைக்கும் எனவும் ஓப்பனிங்கில் கவனம் செலுத்தாது எனவும் முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்பின் பலம்
ஐபிஎல்-ல் மற்ற அணிகளை காட்டிலும் சென்னை அணி அதிகமாக ஸ்பின் பவுலர்களை நம்பியிருக்கிறது. சென்னை ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சென்னை அணியில் 3 ஸ்பின்னர்கள் எப்போதும் இடம் பெறுவார்கள்.

அட்வைஸ்
சென்னை அணியில் ஹர்பஜன் சிங் மற்றும் பியூஸ் சாவ்லா வெளியேற்றப்பட்ட நிலையில் இங்கிலாந்து வீரர் மொயீன் அலியை அந்த அணி தேர்வு செய்யலாம். அவர் அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டையும் கவர் செய்துவிடுவார். மேலும் தோனிக்கும் ஆஃப் ஸ்பின்னர்களை மிக பிடிக்கும் எனவும் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் வேணாம்
சி.எஸ்.கே அணி ஹர்பஜனை மீண்டும் சேர்க்க தேவையில்லை. அணியில் ஏற்கனவே அஷ்வின் தாஹீர் என லெக் ஸ்பின்னர்கள் இருப்பதால் மொயின் அலி போன்ற ஆஃப் ஸ்பின்னரை முயற்சிக்க வேண்டும் என கம்பீர் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த 2வது டெஸ்ட் தொடரில் மொயின் அலி 8 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications