Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா வெற்றிக்கு ஐசிசியின் உதவியே காரணம்..பாக்.வீரர் பகீர் குற்றச்சாட்டு..ரோகித் மீது கடும் தாக்கு

லாகூர்: இந்திய கிரிக்கெட அணி கேப்டன் ரோகித் சர்மா குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

Recommended Video

IND vs PAK Hardik Pandya சொன்ன Chasing ரகசியம் *Cricket

ஆசிய கோப்பை தொடரை முன்னிட்டு, பாகிஸ்தான் நாட்டு சேனலில் விமர்சகராக முகமது ஹபிஸ் பணியாற்றுகிறார்.

அப்போது அவர் இந்திய அணி, ஐசிசி மற்றும் ரோகித் சர்மா குறித்து கடும் விமர்சனங்களை வைத்துள்ளார். அவர் பேசியதை தற்போது காணலாம்.

ரோகித் பயப்படுகிறார்

ரோகித் பயப்படுகிறார்

ரோகித் சர்மாவின் நடத்தையை பாருங்கள். ஹாங்காங்க்கு எதிராக 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றும், அவருடைய ரியாக்சன் சரியில்லை. டாஸ் வீச வரும் போது கூட ரோகித் சர்மா மிகவும் சோர்வாக காணப்படுகிறார். ரோகித் சர்மா தற்போது பயப்படுகிறார், எப்போதும் ரோகித் சர்மா குழப்பமாக காணப்படுகிறார்.

பேட்டிங் பாதிப்பு

பேட்டிங் பாதிப்பு

நான் பார்த்த ரோகித் சர்மா இவர் கிடையாது. ரோகித் எப்போதும் அதிரடியாக ஆடக் கூடியவர். ஆனால், இப்போது கேப்டன் சுமையானது அவருடைய பேட்டிங்கை கடுமையாக பாதித்துள்ளது. ஐபிஎல் தொடரிலும் அவர் மோசமாக செயல்பட்டார். காயத்திலிருந்து மீண்டம் சர்வதேச கிரிக்கெட்க்கு திரும்பிய பிறகும், ரோகித் சர்மாவின் ஆட்டம் சரியில்லை.

பிசிசிஐக்கு தனி மரியாதை

பிசிசிஐக்கு தனி மரியாதை

நாங்கள் நேர்மறையான எண்ணங்களுடன் விளையாடுவோம். அப்படி செயல்படுவோம், இப்படி செயல்படுவோம் என ரோகித் சர்மா பேசுகிறார். ஆனால் அவருடைய உடல் மொழியில் ஒன்றையும் பார்க்க முடியவில்லை. இந்தியாவுக்கு மட்டும் ஐசிசி தனி மரியாதை தருகிறது. ஒரு குடும்பத்தில் எந்த பையன் நன்றாக சம்பாரிக்கிறாரோ அவருக்கு தான் தனி மரியாதை கிடைக்கும்.

வெற்றிக்கு ஐசிசி காரணம்

வெற்றிக்கு ஐசிசி காரணம்

இதே போன்று கிரிக்கெட்டில் பிசிசிஐ தான் அதிக வருவாய் தருகிறது. இதனால் இந்தியாவுக்கு ஐசிசி நிறைய நல்லது செய்கிறது. இந்தியா அதிக லாபம் ஈட்டுவதால் தான் பல தொடர்களில் வெற்றி பெறகிறது என்று கடமையான விமர்சனத்தையும் முகமது ஹபீஸ் முன்வைத்துள்ளார். ஹபீஸ் இந்த கருத்துக்கு இந்திய ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Story first published: Saturday, September 3, 2022, 1:57 [IST]
Other articles published on Sep 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+