Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கோலிக்கு கிடைத்தது ரோகித்திற்கு கிடைக்கல”.. கேப்டன்சியில் பாரபட்சமா?.. முகமது கைஃப் குற்றச்சாட்டு!

மும்பை: விராட் கோலிக்கு கிடைத்த ஒரு விஷயம் ரோகித் சர்மாவுக்கு கொடுக்கப்படுவதில்லை என முன்னாள் வீரர் முகமது கைஃப் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய அணி தற்போது வங்கதேச அணியுடனான 2 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டிகளில் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக விளையாடவில்லை.

ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி செல்ல வேண்டும் என்றால் இந்த 2 போட்டிகளையும் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

வங்கதேச டெஸ்ட் தொடர்

வங்கதேச டெஸ்ட் தொடர்

ஏற்கனவே டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியடைந்த இந்திய அணி, இதிலும் தோல்வியடைந்தால் கேப்டன் ரோகித் சர்மா மீது பெரிய விமர்சனங்கள் குவியும். ஏனென்றால் விராட் கோலி ஐசிசி கோப்பைகளை வென்றுக்கொடுக்கவில்லை என்ற விமர்சனத்தால் தான் ரோகித் கேப்டனாக்கப்பட்டார். ஆனால் அவரின் தலைமையிலும் இந்தியா தொடர்ச்சியாக 2வது ஐசிசி தொடரில் வெளியேறும்.

டி20 புதிய கேப்டன்

டி20 புதிய கேப்டன்

டி20 உலகக்கோப்பையில் தோற்றதற்காக ஏற்கனவே ஹர்திக் பாண்ட்யாவை அடுத்த கேப்டனாக நியமிக்கும் முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுமட்டுமல்லாமல், வரவிருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தான் ரோகித் சர்மாவுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் எனவும், அதிலும் தோற்றால், ரோகித்தும் மாற்றப்படுவார் எனக்கூறப்படுகிறது.

கைஃப் அதிருப்தி

கைஃப் அதிருப்தி

இந்நிலையில் இதற்கு முகமது கைஃப் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதில், கேப்டனானது முதல் பலதரப்பு தொடர்களிலும் ரோகித் சிறப்பாகவே கேப்டன்சி செய்துள்ளார். ஆசியக்கோப்பை மற்றும் உலகக்கோப்பையில் மட்டும் அது தவறியது. விராட் கோலி கேப்டனாக இருந்த போதும் இதே நிலைமை தான் இருந்தது. அவர் கேப்டனாக இருந்த போது அனைத்து இருதரப்பு தொடர்களையும் வென்றார். ஐசிசி கோப்பை மட்டும் கிடைக்கவில்லை.

 கோலிக்கு அதிர்ஷ்டம்

கோலிக்கு அதிர்ஷ்டம்

விராட் கோலிக்கு 4 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் ரோகித் சர்மா கேப்டனான தனது முதல் தொடரிலேயே கோப்பைகளை வென்றாக வேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள். அதனால் தான் அனைவருக்கும் ஏமாற்றம் மிஞ்சுகிறது. ஆனால் மற்றபடி ரோகித் சர்மாவின் புள்ளி விவரங்கள் சிறப்பாக உள்ளது.

அவகாசம் தேவை

அவகாசம் தேவை

கடந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியா 4 போட்டிகளை வென்றது. அனைத்து அணிகளை விடவும் நாம் சிறப்பாகவே இருந்தோம். குறிப்பாக நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்கா தோற்றது. அயர்லாந்திடம் இங்கிலாந்து தோற்றது. எனவே இங்கிலாந்துடனான ஒரு போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது என்று தான் நினைக்கிறேன். அவருக்கு சிறிது அவகாசத்தை கொடுத்தாக வேண்டும் என கைஃப் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, December 14, 2022, 22:07 [IST]
Other articles published on Dec 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+