Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஞ்சி போட்டியில் திடீரென்று விளையாடாத முகமது ஷமி? காரணம் என்ன?

கொல்கத்தா: முகமது ஷமி முழு உடற்தகுதியுடன் உள்ளார் என்றும், அவரே ஓய்வு கேட்டுப் பெற்றுள்ளார் என்றும் பெங்கால் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் லட்சுமி ரத்தன் சுக்லா தெளிவுபடுத்தியுள்ளார். டெல்லியில் சர்வீசஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை எலைட் குரூப் சி போட்டியில் ஷமி சேர்க்கப்படாதது குறித்து எழுந்த விவாதங்களைத் தொடர்ந்து இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.

நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் முகமது ஷமி சேர்க்கப்படாத சில மணி நேரங்களிலேயே, ரஞ்சி கோப்பையின் இரண்டாவது லீக் போட்டிக்கான பெங்கால் அணியின் பிளேயிங் 11-ல் அவர் இடம்பெறாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷமி உடற்தகுதியுடன் இல்லை என பிசிசிஐ தேர்வாளர்கள் கூறிவரும் நிலையில், தான் முழு உடற்தகுதியுடன் இருப்பதாக ஷமி கூறி வருகிறார்.

Mohammed shami

ஷமி விளையாடாதது குறித்துப் பேசிய லட்சுமி ரத்தன் சுக்லா, "ஷமி உடற்தகுதியுடன் தான் இருக்கிறார், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய போட்டியில் அவர் அதிக ஓவர்கள் பந்துவீசினார். அதனால் அவரே ஓய்வு வேண்டி கோரிக்கை விடுத்தார். அவர் ஒரு சீட்டா போன்றவர். ஷமிக்கு ஓய்வு அளித்ததன் மூலம் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் சூழலும் உருவாகியுள்ளது" எனக் கூறினார்.

பிசிசிஐ தேர்வுக்குழுத் தலைவர் பிரக்யான் ஓஜா முன் காத்திருக்கும் சவால்கள் என்ன?

பிசிசிஐ தேர்வுக்குழுத் தலைவர் பிரக்யான் ஓஜா முன் காத்திருக்கும் சவால்கள் என்ன?

இப்போட்டியில் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பெங்கால் அணி சற்று முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாம் நாளில் மட்டும் 15 விக்கெட்டுகள் சரிந்தன. 209 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள சர்வீசஸ் அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்துள்ளது. சர்வீசஸ் அணி வெற்றிபெற இன்னும் 197 ரன்கள் தேவைப்படும் நிலையில் கைவசம் இரண்டு நாட்கள் உள்ளன.

முன்னதாக, தனது முதல் இன்னிங்ஸில் பெங்கால் அணி 184 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களம் கண்ட சர்வீசஸ் அணி 122 ரன்களுக்கு சுருண்டது. காயத்திலிருந்து மீண்டு வந்து விளையாடிய பெங்கால் சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் அகமது 35 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும், ஆமிர் கனி 31 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பிரதீப்தா பிரமானிக் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சர்வீசஸ் அணியின் கேப்டன் ரஜத் பாலிவால் ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் எடுத்தார்.

IND vs NZ: புவனேஸ்வர் குமாருக்கு வாய்ப்பு தந்தது மகிழ்ச்சி!முகமது ஷமிக்கு ஏன் தரவில்லை-ரவி சாஸ்திரி

Also Read

IND vs NZ: புவனேஸ்வர் குமாருக்கு வாய்ப்பு தந்தது மகிழ்ச்சி!முகமது ஷமிக்கு ஏன் தரவில்லை-ரவி சாஸ்திரி

62 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பெங்கால் அணி, சர்வீசஸ் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சிங் சிறப்பான பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்த 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பெங்கால் அணியில் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 30 ரன்களும், விக்கெட் கீப்பர் அபிஷேக் போரெல் 25 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் சர்வீசஸ் அணிக்கு 209 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Story first published: Monday, October 19, 2026, 19:31 [IST]
Other articles published on Oct 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+