Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை.. நான் உச்சக்கட்ட ஃபார்மில்..”.. வெளுத்து வாங்கிய முகமது ஷமி

கொல்கத்தா: சர்வீசஸ் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை வெற்றிக்குப் பிறகு, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது பணிச்சுமை மற்றும் சர்வதேச எதிர்காலம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஷமிக்கு இடம் அளிக்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக அவர் இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில், அவர் இந்த சீசனின் இரண்டாவது ரஞ்சி போட்டியில் விளையாடவில்லை. இவற்றுக்கு எல்லாம் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார் ஷமி.

குறைந்த ஓவர்கள் மட்டுமே வீசுவதாக எழுந்த விமர்சனங்கள் குறித்து ஷமி பேசுகையில், "நான் நீண்ட ஸ்பெல் வீச வேண்டுமா என்பதை வெளியில் இருப்பவர்கள் எப்படி தீர்மானிக்க முடியும்? அது அணியின் தேவையைப் பொறுத்தது. ஓவருக்கு மேல் ஓவர் தொடர்ந்து வீசிக்கொண்டே இருக்க முடியாது. இந்த ஆடுகளத்தில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் 5 அல்லது 10 ஓவர்கள் வீசுவார் என எப்படி முன்கூட்டியே திட்டமிட முடியும்? பேட்டருக்கு சிரமம் இருந்தால் வேகப்பந்து வீச்சாளரும், ஸ்பின்னருக்கு சாதகம் என்றால் அவரும் வீசுவார். இது ஆடுகளத்தின் தன்மை மற்றும் கேப்டனின் முடிவு. இன்று நான் 1.5 மணி நேரம் தொடர்ந்து பந்துவீசினேன். எந்தப் பிரச்சினையும் இல்லை. சுற்றி வளைத்துப் பேச விரும்பவில்லை; நான் இப்போதும் உச்சக்கட்ட பார்மில் தான் இருக்கிறேன்." என்றார்.

Mohammed Shami Addresses National Team Comeback Workload Management and Selection Snub

முந்தைய ரஞ்சி ஆட்டத்தில் ஆடாதது பற்றி ஷமி பேசியதாவது, "ஆடுகளத்தின் நிலைமை உங்களுக்கே தெரியும். இதில் வெறும் 2 முதல் 4 ஓவர்கள் வீசுவதற்காக நான் ஆடுவதில் அர்த்தமில்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதே நல்லது. அவர்கள் அதிகம் ஆடினால் தான் அனுபவம் கிடைக்கும். அணிக்குத் தேவைப்படும் போது களமிறங்குவதே என் நோக்கம். நான் பேட்டராக ஆட முடியாது அல்லவா?" என்றார்.

“சச்சினை பார்த்துதான் இப்படி ஆடினேன்.. நானும் உயரம் குறைவான..”.. ஆஸ்திரேலியாவை அலறவிட்ட பவுமா பேச்சு

“சச்சினை பார்த்துதான் இப்படி ஆடினேன்.. நானும் உயரம் குறைவான..”.. ஆஸ்திரேலியாவை அலறவிட்ட பவுமா பேச்சு

தேர்வுக்குழுவினரின் மவுனம் மற்றும் தனது இந்திய அணி எதிர்காலம் குறித்து பேசிய ஷமி, "நியூசிலாந்து தொடருக்குத் தேர்வு செய்யப்படாததில் ஏமாற்றம் எதுவும் இல்லை. யாருக்கு எப்போது அழைப்பு வரும் என்று யாருக்கும் தெரியாது. உள்நாட்டுப் போட்டிகளில் ஆடுவது ஐபிஎல் தொடருக்கும் நல்ல பயிற்சி. நிறைய போட்டிகளில் ஆடினால் மட்டுமே ரிதம் சிறப்பாக இருக்கும்.
நான் இப்போது அணியிலும் இல்லை, ஒப்பந்தத்திலும் இல்லை; அப்புறம் ஏன் அவர்கள் என்னிடம் இப்போது பேசப் போகிறார்கள்? 2027 உலகக் கோப்பை பற்றி இவ்வளவு முன்கூட்டியே நான் யோசிக்கவில்லை. நம்பிக்கையை ஏன் கைவிட வேண்டும்? எந்தத் துறையிலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது. எப்போதும் ஒரு இலக்கு இருக்க வேண்டும். மீண்டும் இந்தியாவுக்காக ஆட வேண்டும் என்ற இலக்கு எனக்கும் இருக்கிறது; அதை நான் மறுக்கவில்லை." என்றார்.

Story first published: Wednesday, October 21, 2026, 10:43 [IST]
Other articles published on Oct 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+