Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் அங்கு மட்டும் வேண்டாம்.. பிசிசிஐ-ன் திட்டத்துக்கு வலுக்கும் சிக்கல்..மாண்டியின் முழு விளக்கம்

இங்கிலாந்து: ஐபிஎல் தொடரை இங்கிலாந்தில் நடத்துவது குறித்து அந்நாட்டு முன்னாள் வீரர் மாண்டி பனீசர் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. ஏனென்றால் மீதமுள்ள போட்டிகளை நடத்தாவிட்டால் பிசிசிஐக்கு ரூ.2500 கோடி வரை நஷ்டம் ஏற்படும் எனக்கூறப்படுகிறது.

கடந்த ஏப்.9ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 29ம் லீக் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 31 போட்டிகள் தடைபட்டுள்ளன.

பெரும் நஷ்டம்

பெரும் நஷ்டம்

இந்திய அணிக்கு செப்.14ம் தேதி வரை டெஸ்ட் தொடர் உள்ளது. அதே போல் அக்டோபர் மாதத்தில் டி20 உலகக்கோப்பை தொடங்கிவிடும். எனவே டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக செப்டம்பரிலேயே ஐபிஎல் தொடரை நடத்தி முடித்துவிட வேண்டும் என திட்டமிடப்பட்டு வருகிறது. அதன்படி தொடரை எங்கு நடத்தலாம் என்ற கேள்வி முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

2 வாய்ப்புகள்

2 வாய்ப்புகள்

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளதால் அயல்நாட்டில் தான் ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடிக்க வேண்டும். இதற்காக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இங்கிலாந்து நாடுகள் பிசிசிஐ-ன் முக்கிய தேர்வுகளாக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு அங்கேயே ஐபிஎல் தொடரை நடத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் ஆக.4ம் தேதி தொடங்கி செப்.14ம் தேதி முடிவடைகிறது. எனவே செப்.15 முதல் அக்.15 வரை இங்கிலாந்தில் ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து வேண்டாம்

இங்கிலாந்து வேண்டாம்

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனீசர், செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் ஐபிஎல் தொடரை நடத்தும் யோசனை தவறானது. செப்டம்பரில் இங்கிலாந்தில் கடும் மழைப்பொழிவு இருக்கும். எனவே இவை ஆட்டத்தை கெடுத்து விடும். இதனால் பல முக்கிய ஆட்டங்கள் 15 ஓவர்கள் அல்லது 10 ஓவர்களாக குறைக்கப்படுவதை பார்க்கக்கூடும். ஐபிஎல்-ல் 15வது ஓவர் முதல் 20வது ஓவரில் தான் சுவாரஸ்யம் அதிகம் இருக்கும். மழையால் அது கெட்டுவிடக்கூடாது.

அட்வைஸ்

அட்வைஸ்

இந்தியாவால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட வேண்டும். ஏனென்றால் அங்கு செப்டம்பர் மாதத்தில் நல்ல வானிலை நிலவும். எனவே அதனை தான் அதிகாரிகள் தேர்வு செய்ய வேண்டும் என மாண்டி தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, May 25, 2021, 18:17 [IST]
Other articles published on May 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+