Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்குகூட கிடைக்கல...மோரீசுக்கு அதிகமா கிடைச்சுருக்கு... என்ன இப்படி கிளம்பிட்டாரு பீட்டர்சன்!

மும்பை : ஐபிஎல் 2021 தொடரில் அதிகமான தொகைக்கு அதாவது 16.25 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிறிஸ் மோரீஸ் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

இதனால் அவருக்கு அதிகமான நெருக்கடி உள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

தனக்கு இதுவரை கிடைக்காத அளவில் மோரீசுக்கு அதிக தொகை ஐபிஎல்லில் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக தொகைக்கு ஏலம்

அதிக தொகைக்கு ஏலம்

ஐபிஎல் 2021 தொடரின் அதிக தொகைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார் தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரீஸ். கடந்த ஏலத்தில் 16.25 கோடி ரூபாய்க்கு அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இது அவருக்கு எதிரான பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.

பீட்டர்சன் ஆதங்கம்

பீட்டர்சன் ஆதங்கம்

இந்நிலையில் தற்போது இதுகுறித்து மீண்டும் பேசியுள்ளார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன். தான் இதுவரை பெறாத வகையில் கிறிஸ் மோரீசுக்கு அதிக தொகை ஐபிஎல் 2021 தொடரில் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். ஆனால் மோரீஸ் அதற்கு தகுந்தவர் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மோரீஸ் குறித்து விமர்சனம்

மோரீஸ் குறித்து விமர்சனம்

ஆனால் இந்த தொகைக்கு அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளதால் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயம் அவருக்கு தொடர்ந்து இருக்கும் என்றும் பீட்டர்சன் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ் மோரீஸ் இரண்டு போட்டியில் சிறப்பாக விளையாடுவார். தொடர்ந்து சில போட்டிகளில் காணாமல் போய் விடுவார் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆர்சிபிக்கு எதிராக சொதப்பல்

ஆர்சிபிக்கு எதிராக சொதப்பல்

கடந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய மோரீஸ், ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சொதப்பினார். 7 பந்துகளில் விளையாடி 10 ரன்களை மட்டுமே அவர் அடித்திருந்தார். இதை தொடர்ந்தே கெவின் பீட்டர்சன் கிறிஸ் மோரீஸ் குறித்து இத்தகைய கமெண்ட்டை பதிவு செய்துள்ளார்.

இறுதி இடத்தில் ராஜஸ்தான்

இறுதி இடத்தில் ராஜஸ்தான்

ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இதனிடையே நாளைய தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதவுள்ளது.

Story first published: Friday, April 23, 2021, 19:14 [IST]
Other articles published on Apr 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+