இந்திய அணியை காலி செய்ய வந்துள்ள மலை மனிதன்..!! டெஸ்ட் தொடருக்கு பின் எடுக்க உள்ள புதிய அவதாரம்
போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் கார்ன்வால் களமிறங்கினால், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அதிக உடல் எடை கொண்ட வீரர் என்ற பெருமையை பெறுவார்.
2007-ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் ஒரு அரிதான சம்பவம் நடந்தது. அதாவது பெர்முடா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், உத்தப்பா ஆட்டமிழந்ததை ரசிகர்கள் எளிதில் மறந்துவிட முடியாது. ஏனெனில் அதிக எடை கொண்ட பெர்முடா அணி வீரர் லிவராக்கின் அற்புதமான கேட்சில் ஆட்டம் இழந்தார்.
அந்த அசத்தல் கேட்ச், ரசிகர்கள் மத்தியில் அப்போது வியப்புடன் பேசப்பட்டது. காரணம் கேட்ச் பிடித்த பெர்முடா வீரர் லிவராக்கின் உடல் எடை 127 கிலோ. ஆனால் அவரையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு எடை கொண்ட வீரர் ஒருவர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் தற்போது இடம் பிடித்துள்ளார்.

260 விக்கெட்டுகள்
அவரது பெயர் ரஹீம் கார்ன்வால். வயது 26. 6.6 அடி உயரம், 140 எடை கொண்டவர். உள்ளூர் டி 20 போட்டிகளில் இமாலய சிக்சர்களை பறக்க விட்டவர் கார்ன்வால். பேட்டிங் மட்டுமல்ல... பவுலிங்கிலும் ஒரு கை பார்த்தவர். சிறந்த ஆல்ரவுண்டராக உள்ளார். இதுவரை 55 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி2,224 ரன்கள் எடுத்துள்ளார். 260 விக்கெட்களையும் சாய்த்திருக்கிறார்.

பயிற்சியில் கலக்கியவர்
2017ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், முன்னணி வீரர்களான புஜாரா, கோலி, ரஹானே உள்ளிட்ட 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார் கார்ன்வால். இதுவரை உடல் தகுதியை நிரூபிக்க முடியாமல் திணறி வந்த அவர், உடல் தகுதியை நிரூபித்து, வரும் 22-ம் தேதி துவங்கும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், கார்ன்வால் இடம்பெற்றிருக்கிறார்.

புதிய சாதனை
இந்த டெஸ்ட் போட்டியில் கார்ன்வால் களம் இறங்கினால், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் மிகப்பெரிய வீரர் என்ற அரிய சாதனையை படைப்பார். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் மிரட்டும் கார்ன்வால் இந்திய அணிக்கு நிச்சயம் நெருக்கடி கொடுப்பார்.

உடல்எடை குறைப்பு?
மேலும் டெஸ்ட் போட்டியில் தேர்வான பிறகு, தொடர் முடிந்தவுடன் எடையை குறைப்பதற்கான பயிற்சிகளையும் கார்ன்வால் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கார்ன்வால் களமிறங்கினால், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அதிக உடல் எடை கொண்ட வீரர் என்ற பெருமையை பெறுவார்.


Click it and Unblock the Notifications