Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குழந்தை மாதிரி தேம்பி தேம்பி அழுதார்.. தோனியை அப்படி பார்த்ததே இல்லை.. கலங்க வைத்த சஞ்சய் பங்கர்!

சென்னை: 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்த பின் குழந்தையை போல் தோனி கண்கலங்கியதாக முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது. இதன் மூலம் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்ததாக ரசிகர்கள் கொண்டாடினர்.

MS Dhoni Cried like a kid after the loss against New Zealand in 2019 World Cup says Sanjay Bangar

இதன் காரணமாக 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் குறித்து அதிகமான கருத்துகள் பகிரப்பட்டது. அந்த வகையில் 2019ஆம் ஆண்டு இந்திய அணி பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் சில ரகசியங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். குறிப்பாக நியூசிலாந்து அணியுடனான தோல்விக்கு பின் இந்திய அணியின் ஓய்வறையில் இருந்த வீரர்களின் நிலைமை குறித்து கூறியுள்ளார்.

சஞ்சய் பங்கர் பேசுகையில், 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் சிறந்த கீரிக்கெட்டை இந்திய அணி விளையாடி இருந்தது. லீக் சுற்றில் 7 போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறிய போது, நியூசிலாந்து அணியுடன் தோல்வியடைந்ததால் வீரர்கள் மனதளவில் நொறுங்கிவிட்டனர். அந்த சூழலில் வீரர்கள் அனைவருமே குழந்தைகளை போல் அழுக தொடங்கிவிட்டனர். அனுபவம் வாய்ந்த எம்எஸ் தோனியே குழந்தை போல் அழுதார். ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் உள்ளிட்டோரின் கண்கள் கலங்கிவிட்டது என்று கூறியுள்ளார்.

அதேபோல் தோனி ஆட்டமிழந்த போதே ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் கண்கலங்க தொடங்கினர். அந்த தோல்வியில் இருந்து தோனி மீண்டு வர கிட்டத்தட்ட 3 மாதங்களாகியது. ஏனென்றால் 3 மாதங்களுக்கு பின் பேசிய போது, அந்த ரன்னுக்கு ஓடும் போது நான் ஏன் டைவ் அடிக்க மறந்தேன் என்று இப்போதும் யோசித்து வருவதாக என்று கூறினார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் அதுவே தோனியின் கடைசி போட்டியாக அமைந்தது.

வழக்கமாக உணர்வுகளை எளிதில் வெளிக்காட்டாத தோனி குழந்தையை போல் கண்கலங்கினார் என்று முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியுள்ள சம்பவம் தோனி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 2019ஆம் ஆண்டு தோல்விக்கு மருந்தாக, நடைபெற்று வரும் உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Monday, October 23, 2023, 19:22 [IST]
Other articles published on Oct 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+