Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிம்மன்ஸ்,பொல்லார்டு பேயாட்டம்! டெல்லியை பிரித்து மேய்ந்த மும்பை..146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டெல்லி: ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக, மும்பை இந்தியன்ஸ் 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டெல்லியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஐபிஎல் 45வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.

 Mumbai beat Delhi by 146 runs

இதையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு, ஓபனிங் வீரர் பார்த்தீப் படேல் (25) சுமாரான துவக்கம் தந்தார். மற்றொரு துவக்க வீரர் சிம்மன்ஸ் (66) அரைசதம் அடித்து கைகொடுத்தார். கேப்டன் ரோகித் சர்மா 10 ரன்கள் எடுத்த நிலையில் நடையை கட்டினார்.

அடுத்து ஜோடி சேர்ந்த பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா நங்கூரமாக நின்று டெல்லி பந்துவீச்சை நாலாபுறமும் தெறிக்கவிட்டனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்த மும்பை 212 ரன்கள் குவித்தது.

அதிரடி காட்டிய பொல்லார்டு 35 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 63 ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா 14 பந்தில் 1 பவுண்டரி, 3 சிக்சருடன் 29 ரன்களுடன் கடைசி வரை அவுட்டாகமல் இருந்தனர்.

இமாலய இலக்கை விரட்டிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 13.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ரன்கள் எடுத்து படுத்தோல்வி அடைந்தது. இதனால் 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ்.

Story first published: Saturday, May 6, 2017, 23:53 [IST]
Other articles published on May 6, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+