Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பையிடம் வெள்ளைக்கொடியோடு சரண்டர் ஆன ராஜஸ்தான் ராயல்ஸ்

அகமதாபாத்: ஐபிஎல் சீசன் 7ல் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக வெற்றி கண்டது.

ஒப்பனிங் ஸ்டிராங்

ஒப்பனிங் ஸ்டிராங்

ஐபிஎல்லின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்' ஜெயித்த மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் ஷர்மா தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக மைக் ஹஸ்ஸி, சிம்மோன்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடி ரசிகர்களுக்கு விருந்து படைத்ததுடன் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினார்கள். இந்த ஜோடியை விரைவில் பிரிக்க முடியாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சாளர்கள் திணறினார்கள்.

தப்பி பிழைத்த பொல்லார்ட்

தப்பி பிழைத்த பொல்லார்ட்

மைக் ஹஸ்ஸி மற்றும் சிம்மோன்ஸ் அரை சதத்தை தாண்டினார். அணியின் ஸ்கோர் 120 ரன்னாக இருந்த போது சிம்மோன்ஸ் 62 ரன்னில் அங்கித் ஷர்மா பந்து வீச்சில் கெவோன் கூப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே ஓவரில் கடைசி பந்தில் மைக் ஹஸ்ஸியும் 56 ரன்னில் அவுட் ஆனார். இதனை அடுத்து பொல்லார்ட்டுடன் ஜோடி சேர்ந்தார் ரோகித் ஷர்மா. ஒரு ரன்னில் இருக்கையில் ரன்-அவுட்டில் இருந்து தப்பிய பொல்லார்ட் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தார்.

பட்டையை கிளப்பிய ரோகித் ஷர்மா

பட்டையை கிளப்பிய ரோகித் ஷர்மா

பொலார்ட் தடுத்தாட, ரோகித் ஷர்மா அடித்தாடினார். கடைசி பந்தில் ரோகித் ஷர்மா ரன் அவுட் ஆனார். 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. பொல்லார்ட் 12 பந்துகளில் ஒரு சிக்சருடன் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ரோகித் ஷர்மா 40 ரன்கள் விளாசினார்.

நிலைக்கவில்லை

நிலைக்கவில்லை

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விக்கெட்டுகள் குறுகிய இடைவெளியில் வீழ்ந்த வண்ணம் இருந்தன. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் கருண் நாயர் 48 ரன்னும், பிராட் ஹாட்ஜ் 40 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்கள்.

மும்பை வெற்றி

மும்பை வெற்றி

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பவுல்க்னெர் 21 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 31 ரன்னும், ரஜத் பாட்டியா 4 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

சூப்பர் கேட்ச்

சூப்பர் கேட்ச்

கெவோன் கூப்பர் அடித்த பந்தை பொல்லார்ட் பவுண்டரி எல்லையில் கோட்டை தொடாமல் சமயோகிதமாக சமாளித்து அருமையாக கேட்ச் செய்து ஆட்டம் இழக்க வைத்து ஐபிஎல் சீசன் 7ன் சிறந்த கேட்சுகளில் ஒன்றை பதிவு செய்தார். மும்பை வீரர் மைக் ஹஸ்ஸி ஆட்டநாயகன் விருது பெற்றார். 12வது ஆட்டத்தில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும். 11-வது ஆட்டத்தில் விளையாடிய மும்பை அணிக்கு இது 4வது வெற்றியாகும். இன்னும் தங்களது பிளே-ஆப் கனவு தகர்ந்து போகவில்லை, வாய்ப்பு மிச்சமுள்ளது என்று மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா தெரிவித்தார்.

Story first published: Tuesday, May 20, 2014, 16:46 [IST]
Other articles published on May 20, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+