Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அத்தனை அவமானங்களுக்கும் பதில்.. விளாசிய இஷான் கிஷன்.. வெற்றியுடன் ரன் ரேட்டை எகிற வைத்த மும்பை!

ஷார்ஜா: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், மும்பை அணி 10 பத்து ஓவர்களுக்கு உள்ளாகவே போட்டியை முடித்து வென்றுள்ளது.

ஐபிஎல் தொடரில், இன்று (அக்.5) நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில், ராஜஸ்தான் நிர்ணயித்த 94 ரன்கள் இலக்கை வெறும் 8.2 ஓவர்களில் சேஸ் செய்து வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

 அடுத்தடுத்து விக்கெட்ஸ்

அடுத்தடுத்து விக்கெட்ஸ்

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில், சென்னைக்கு எதிராக அரைசதம் அடித்து விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெறும் 12 ரன்களில் கோல்டர் நைல் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். பிறகு, மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களில் பும்ரா ஓவரில் எல்பிடபிள்யூ ஆக, 'இதோ வந்துட்டேன்' என்று கேப்டன் சஞ்சு சாம்சன் வெறும் 3 ரன்களில் கேட்ச் கொடுத்து அவசர அவசரமாக நடையைக் கட்டினார். 41 ரன்களுக்கெல்லாம் அந்த அணி மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது. பிறகு டூபேவும் 3 ரன்களில் அவுட்டாக, நான்காவது விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான். சென்னையை வெளுத்த அத்தனை வீரர்களும் 10 ஓவர்களுக்குள் அவுட்டாகி வெளியேறினார்கள். இதன் பிறகு, ராஜஸ்தான் அணியால் கடைசி வரை மீண்டு வர முடியவில்லை. க்ளென் ஃபிலிப்ஸ் வெறும் 4 ரன்களில், கோல்டர் நைல் ஓவரில் போல்டாக, ராஜஸ்தான் 50 ரன்களுக்கெல்லாம் ஐந்தாவது விக்கெட்டை இழந்தது. அதவாது, 13 ஓவர்களுக்கு அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்தது.

 மிக குறைவான ஸ்கோர்

மிக குறைவான ஸ்கோர்

பிறகு நீஷம் வீசிய ஒரு அற்புதமான ஷாட் பந்தில், 20 ரன்களில் 12 ரன்கள் எடுத்திருந்த தெவாட்டியா கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பின்னர் ஷ்ரேயாஸ் கோபால், பும்ரா ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே எட்ஜ் அகி தலையை தொங்கப் போட்டுச் சென்றார். கடைசி நம்பிக்கையாய் இருந்த டேவிட் மில்லர் 15 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார். 5.1வது ஓவருக்கு பிறகு, ராஜஸ்தான் அணியால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. அதன் பிறகு 18.2வது ஓவரில் ஒரு எட்ஜ் காரணமாக பவுண்டரி கிடைத்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. முடிவில், ராஜஸ்தான் 20 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து வெறும் 90 ரன்களே எடுத்தது.

 ஏமாற்றிய சூர்யா

ஏமாற்றிய சூர்யா

இதையடுத்து, களமிறங்கிய மும்பை அணியில், ரோஹித் ஷர்மா தொடக்கம் முதலே பந்துகளை விளாச தொடங்கினார். ஏனெனில், 10 ஓவர்களுக்குள் போட்டியை முடித்தால், ரன்ரேட், -0.11 என்று அதிகரித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை மேலும் அதிகரித்துக் கொள்ள இந்த போட்டியை மும்பை பயன்படுத்த நினைத்தது. இதனால், அதிரடி காட்டிய ரோஹித் 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில், 2 சிக்ஸர்களும், 1 பவுண்டரியும் அடங்கும். பிறகு, சூர்யகுமார் யாதவ் 13 ரன்களில் கேட்ச்சாக, 56 ரன்களுக்கு இரண்டாவது விக்கெட்டை இழந்தது மும்பை.

 பட்டாசு இஷான்

பட்டாசு இஷான்

எனினும், மோசமான ஃபார்ம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளாக வெளியே உட்கார வைக்கப்பட்டிருந்த இஷான் கிஷன், இன்று பழைய பன்னீர் செல்வமாய் வெடித்துத் தள்ளினார். இதனால், 8.2வது ஓவரிலே 94 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. இஷான் கிஷன் 25 பந்துகளில் அரைசதம் விளாசி அட்டகாசமாக விளையாடினார். இந்த அபார வெற்றியின் காரணமாக, மும்பை இந்தியன்ஸ் அணி இன்னமும் பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கிறது. காரணம், இப்போது அவர்களது ரன் ரேட் -0.048.

Story first published: Tuesday, October 5, 2021, 22:46 [IST]
Other articles published on Oct 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+