Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பொல்லார்டின் அதிரடியால் நொறுங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்... மும்பை இந்தியன்ஸ் அசத்தல் வெற்றி!

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 47 பந்துகளில் 70 ரன்கள் குவித்த பொல்லார்டு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல் 10வது சீசன் தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்டிங் செய்தது. ஐ.பி.எல். கிரிக்கெட் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெங்களூரு அணி 143 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயத்தது. பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட மும்பை அணி தொடக்கத்தில் பேட்டிங்கில் சொதப்பியது

3 ஓவரில் 4 விக்கெட்டு

3 ஓவரில் 4 விக்கெட்டு

முதல் மூன்று ஓவர்களுக்குகள் மொத்தம் 7 ரன்கள் மட்டும் எடுத்து இருந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்களை இழந்தது. பெங்களூரு வீரர் சாமுவேல் பத்ரி ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்தினார்.

கண்ணாமூச்சி காட்டிய பத்ரி

கண்ணாமூச்சி காட்டிய பத்ரி

சாமுவேல் பத்ரி, பார்த்திவ் பட்டேல், ரோஹித் சர்மா, மிச்சல் மெக்லென்கான் விக்கெட்களை வீழ்த்தினார். மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான பட்லர், பின்னி பந்து வீச்சில் அவுட் ஆனார்.

கைகோர்த்த பொல்லார்டு

கைகோர்த்த பொல்லார்டு

இதனையடுத்து 5வது ஆட்டக்காரராக களமிறங்கிய ராணா 11 ரன்களில் அவுட் ஆனார். 7.6 வது ஓவரில் மும்பை அணி 5 விக்கெட்களை இழந்து 33 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. இதனையடுத்து பொல்லார்டு, பாண்ட்யா இணை கைகோர்த்தது.

வெற்றி கனவை சிதைத்தார்

வெற்றி கனவை சிதைத்தார்

நிதானமாக விளையாடிய பொல்லார்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு உதவினார். மொத்தம் 47 பந்துகளை எதிர்க்கொண்ட பொல்லார்டு 3 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என மொத்தம் 70 ரன்கள் குவித்து பெங்களூரு அணியின் வெற்றி கனவை சிதைத்தார்.

சாஹலிடம் வீழ்ந்த பொல்லார்டு

சாஹலிடம் வீழ்ந்த பொல்லார்டு

தொடக்கத்தில் 5 விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்திய பெங்களூரு அணிக்கு ஆட்டம் காண்பித்த பொல்லார்டு விக்கெட்டை சாஹல் வீழ்த்தினார். அவருடன் கைகோர்த்து விளையாடிய குணால் பாண்ட்யாவுடன், ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். இருவரும் எஞ்சிய ரன்களை அடித்து மும்பை அணியை வெற்றியடைய செய்தார்கள்.

4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை இந்தியன்ஸ் அணி 18.5 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ஆட்டநாயகனாக பொல்லார்டு அறிவிக்கப்பட்டார். பெங்களூரு தரப்பில் பத்ரி ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனையை படைத்தார்.

Story first published: Friday, April 14, 2017, 21:30 [IST]
Other articles published on Apr 14, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+