For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி காக் எனக்கு வேணும்.. இந்த 2 பேரை வேணா வாங்கிக்குங்க.. வியாபாரத்தை துவங்கிய அம்பானி

மும்பை : ஐபிஎல் அணிகள் வரும் நவம்பர் 15க்குள் தற்போதுள்ள தங்கள் வீரர்கள் பட்டியலில் மாற்றத்தை செய்து கொள்ளலாம்.

இந்த சமயத்தில் வேண்டாத வீரர்களை ஒப்பந்தத்தில் இருந்து விலக்கிவிட்டு மற்ற அணிகளிலிருந்து நீக்கப்பட்ட வீரர்களை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த வீரர்கள் வியாபாரத்தில் முகேஷ் அம்பானியின் (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்) மும்பை இந்தியன்ஸ் அணி 2019 சீசனுக்கான முதல் வியாபாரத்தை துவங்கி வைத்துள்ளது.

வியாபாரம் ஆரம்பம்

வியாபாரம் ஆரம்பம்

இந்த முதல் வியாபாரத்தில், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தென்னாபிரிக்காவின் க்விண்டன் டி காக்கை, அவரது 2018 ஏல மதிப்பான 2.8 கோடிக்கே மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.

இரு வீரர்கள் விடுவிப்பு

இரு வீரர்கள் விடுவிப்பு

இந்த மதிப்பை ஈடுகட்ட தங்கள் அணியில் இருந்த இலங்கையின் அகிலா தனஞ்ஜெயா மற்றும் வங்கதேசத்தின் முஸ்தாபிசூர் ரஹ்மான் ஆகியோரை ஒப்பந்தத்தில் இருந்து விடுவித்துள்ளது. இவர்களது மதிப்பு 50 லட்சம் (அகிலா தனஞ்ஜெயா) மற்றும் 2.2 கோடி (முஸ்தாபிசூர் ரஹ்மான்) ஆகும்.

க்விண்டன் டி காக்கை வாங்கியது ஏன்?

க்விண்டன் டி காக்கை வாங்கியது ஏன்?

க்விண்டன் டி காக் தென்னாபிரிக்காவை சேர்ந்த வீரர். இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கிறார். துவக்க வீரராகவும் சிறப்பாக செயல்படக் கூடியவர் டி காக். மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன், ஆதித்ய தாரே ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்கள் இருக்கிறார்கள். எனவே, டி காக் பேட்ஸ்மேனாக மட்டும் பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

2019 ஐபிஎல் இந்தியாவில் நடக்குமா?

2019 ஐபிஎல் இந்தியாவில் நடக்குமா?

2019 ஐபிஎல் இந்தியாவில் நடைபெறுமா என்ற சந்தேகம் இருக்கிறது. அதற்கு காரணம், இந்திய பாராளுமன்ற தேர்தல் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் சமயத்தில் தான் நடைபெறும். இந்த நிலையில் ஐபிஎல் அணிகள் வீரர்கள் தேர்வு, அணித் திட்டம் ஆகியவற்றில் பொறுமையாக இருந்து வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் மட்டுமே ஒரு வீரரை வாங்கியுள்ளது. பெங்களூர் அணி டி காக்கை விடுவித்துள்ளது. வேறு எந்த வீரரையும் வாங்கவில்லை.

Story first published: Saturday, October 20, 2018, 16:16 [IST]
Other articles published on Oct 20, 2018
English summary
Mumbai Indians bought Quinton De Cock from RCB ahead of 2019 IPL.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X