Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ரோஹித் சர்மாவை மீண்டும் கேப்டன் ஆவார் என்பதில் துளியும்..".. மும்பை இந்தியன்ஸ் நெத்தியடி பதில்

மும்பை: 2027 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா மீண்டும் நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களை அந்த அணி நிர்வாகம் மறுத்துள்ளது. 2024 ஐபிஎல் தொடருக்கு முன்பாக 5 முறை கோப்பை வென்று தந்த ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு, ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக நியமித்தது. ஆனால் குஜராத் அணிக்கு 2022-ல் கோப்பை வென்று கொடுத்த ஹர்திக்கால், மும்பை இந்தியன்ஸ் அணியில் சாதிக்க முடியவில்லை.

கடந்த 2024-ல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 2025-ல் குவாலிபையர் 2 வரை சென்று, மீண்டும் 2026-ல் 9-வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இதனால் ஹர்திக் பாண்டியாவை வர்த்தக முறையில் விற்க மும்பை நிர்வாகம் தயாராக உள்ளதாகவும், மீண்டும் ரோஹித் சர்மா கேப்டனாகப் பொறுப்பேற்பார் என்றும் தகவல்கள் பரவின.

Mumbai Indians clarify Rohit Sharma Captaincy Rumors in IPL 2027

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மும்பை இந்தியன்ஸ் வட்டாரங்கள், ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாவார் என்ற பேச்சில் துளியும் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளன. அடுத்த சீசன் கேப்டன் யார் என்பது குறித்து இதுவரை நிர்வாகத்திற்குள் எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. ஹர்திக் பாண்டியாவை வர்த்தக முறையில் விடுவிக்க நிர்வாகம் தயாராக இருந்தாலும், இதுவரை எந்த அணியிடமிருந்தும் பொருத்தமான ஒப்பந்தம் அமையவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

ஒருவேளை ஹர்திக் பாண்டியா வெளியேறினாலும் ரோஹித் சர்மா கேப்டனாகப் பரிசீலிக்கப்பட மாட்டார். மாறாக சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகிய இருவரும் கேப்டன் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளனர். நியூசிலாந்து அணியை வழிநடத்தும் மிட்செல் சான்ட்னரும் இந்தப் பட்டியலில் உள்ளார்.

அபிஷேக் சர்மா ரெக்கார்டை முறியடித்த பாகிஸ்தான் கேப்டன்.. விராட் கோலி வரிசையில் புதிய வரலாறு

அபிஷேக் சர்மா ரெக்கார்டை முறியடித்த பாகிஸ்தான் கேப்டன்.. விராட் கோலி வரிசையில் புதிய வரலாறு

சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கு 2026 டி20 உலகக்கோப்பையை வென்று தந்தவர். அதேபோல் திலக் வர்மா இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் குழப்பங்கள் நிலவும் மோசமான சூழலில் கூட ரோஹித் சர்மாவை மீண்டும் கேப்டனாக்க மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் விரும்பவில்லை என்ற தகவல் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, October 14, 2026, 12:02 [IST]
Other articles published on Oct 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+