For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆட்டநாயகன் விருது வென்ற இஞ்சினியர் பட்டதாரி.. மும்பையை காப்பாற்றிய ஆகாஷ் மத்வால்.. எங்க இருந்தீங்க

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 29 வயதான ஆகாஷ் மத்வால் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார். உத்தரகாண்ட் சேர்ந்த ஆகாஷ் மத்வால் கடந்த ஆண்டு சூரிய குமார் யாதவ் காயம் அடைந்தபோது மாற்று வீரராக மும்பை அணிக்கு வந்தார்.

ஆனால் அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணி பெரிய அளவில் வாய்ப்பு வழங்கவில்லை. இந்த நிலையில் நடப்பு சீசனில் மே மூன்றாம் தேதி தான் அவர் தனது முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடினார்.

Mumbai indians finds a new hero in the form of akash madhwal an engineer graduate

அதன் பிறகு சூப்பர் கிங்ஸ் எதிராக ஒரு விக்கெட் குஜராத் அணிக்கு எதிராக மூன்று விக்கெட் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நான்கு விக்கெட் என கலக்கிய ஆகாஷ் மத்வால் தற்போது லக்னோ அணிக்கு எதிராக 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அணில் கும்பலேவின் சாதனையை சமன் செய்திருக்கிறார். ஆகாஷ் மத்வால் பொறியியல் பட்டதாரி ஆவார்.

டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடி வந்த ஆகாஷ் மத்வால் ரிஷப் பந்தின் தயவால் கிரிக்கெட்டுக்குள் வந்திருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு சையது முஸ்தாக் கோப்பையில் அறிமுகமான ஆகாஷ் மத்வால் அதே ஆண்டு ரஞ்சிக்கோப்பையிலும் அதற்கு அடுத்த ஆண்டு விஜய் ஹசாரே கோப்பையிலும் அறிமுகமாகி இருக்கிறார்.ஆர் சி பி அணியின் வலை பயிற்சி பந்துவீச்சாளராகவும் மும்பை அணியின் வலைப்பயிற்சி பவுலர் ஆகவும் ஆகாஷ் மதுவால் பணியாற்று இருக்கிறார்.

இந்த சீசனுக்கு முன்பு 25 டி20 போட்டிகளில் விளையாடிய ஆகாஷ் மத்வால் 25 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இதேபோன்று பத்து உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை ஆகாஷ் மத்வால் கைப்பற்றி இருக்கிறார்.இந்த நிலையில் ஆட்ட நாயகன் விருதை வென்ற ஆகாஷ் மத்வால் பேசுகையில், தாம் தொடர்ந்து பயிற்சி செய்து வந்து வாய்ப்புக்காக காத்திருந்தேன். கிரிக்கெட் மீது எனக்கு தீராத காதல் இருந்தபோதிலிருந்தே நான் டென்னிஸ் வந்து கிரிக்கெட்டில் பயிற்சி செய்தேன்.

எனக்கு பெருமையாக இருந்தாலும் நான் இன்னும் சிறப்பாக பந்து வீசுவேன் என நினைக்கிறேன். பும்ராவிடம் என்னை ஒப்பிடாதீர்கள். அவர் வேற லெவல் நான் இப்போதுதான் நன்றாக பந்து வீசத் தொடங்கி இருக்கிறேன். பொறியியல் பட்டதாரிகள் என்றும் ஒரு வேலையை விரைவாக கற்றுக் கொள்வார்கள் நானும் அப்படித்தான் என்று ஆகாஷ் மத்வானி கூறியுள்ளார்.

Story first published: Thursday, May 25, 2023, 6:56 [IST]
Other articles published on May 25, 2023
English summary
Mumbai indians finds a new hero in the form of akash madhwal an engineer graduate ஆட்டநாயகன் விருது வென்ற இஞ்சினியர் பட்டதாரி.. மும்பையை காப்பாற்றிய ஆகாஷ் மத்வால்.. எங்க இருந்தீங்க
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+