Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கொடி, ஜெர்சி ரெண்டுமே சிறப்பான பீல் கொடுக்கும்... கிஷனுக்கு சீனியர் கொடுத்த அறிவுரை

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான நேற்றைய 2வது டி20 போட்டியில் அறிமுக மற்றும் துவக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 56 ரன்களை குவித்துள்ளார்.

இதையடுத்து அவர் தனது அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த போட்டியை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா தனக்கு கொடுத்த அறிவுரை குறித்து அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

டி20 தொடர்

டி20 தொடர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டி20 தொடரின் 2வது போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் இந்தியா அபாரமாக விளையாடி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் தனது அறிமுக போட்டியில் விளையாடினார் இஷான் கிஷன்.

ஆட்ட நாயகன்

ஆட்ட நாயகன்

அன்டர் 19 போட்டிகளில் விளையாடியுள்ள கிஷன் மற்றும் பந்த் இருவரும் அதில் துவக்க வீரர்களாக விளையாடியுள்ளனர். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் கிஷன். இதனிடையே நேற்றைய போட்டியிலும் துவக்க வீரராக களமிறங்கிய அவர், 28 பந்துகளில் 56 ரன்களை குவித்து ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தெளிவை ஏற்படுத்திய ஆலோசனை

தெளிவை ஏற்படுத்திய ஆலோசனை

இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு முன்னதாக தான் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவுடன் பேசியதாகவும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை போல சுதந்திரமாக விளையாட அவர் அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். தான் பதற்றமாக இருந்ததாகவும் ஆனால் ரோகித்தின் அறிவுரை தனக்கு தெளிவை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

மூத்த வீரர்கள் அறிவுரை

மூத்த வீரர்கள் அறிவுரை

தேசிய கொடியை பார்க்கும்போதும் இந்திய ஜெர்சியை போட்டு விளையாடும்போதும் சிறப்பாக உணர முடியும் என்றும் நம்முடைய சிறப்பான செயல்பாட்டை அளிப்பதே அங்கு முக்கியம் என்றும் ரோகித் அறிவுறுத்தியதாக கிஷன் குறிப்பிட்டுள்ளார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி தனக்கு அனைத்தையும் கற்று கொடுத்துள்ளதாகவும் மூத்த வீரர்கள் மற்றும் மற்றவர்களுடன் தான் ஆலோசனை மேற்கொண்டதாகவும் இஷான் கிஷன் மேலும் கூறினார்.

Story first published: Monday, March 15, 2021, 12:20 [IST]
Other articles published on Mar 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+