
தொடர்ந்து தடுமாறும் தவான்
தவான் இந்த முறையும் சோபிக்கவில்லை. 11 ரன்களிலேயே மலிங்காவின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் 10 ரன்களில் ரன்-அவுட் ஆனார்.

வழக்கமான ஆட்டம்
இதன் பின்னர் ஆரோன் பிஞ்சும், டேவிட் வார்னரும் கூட்டணி சேர்ந்தனர். ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் அதிரடி காட்டவில்லை. 17 மற்றும் 18-வது ஓவர்களில் தலா 6 ரன் மட்டுமே எடுத்தனர். இதனால் 150 ரன்களையாவது தொடுமா? என்ற கேள்விக் குறி எழுந்தது.

ஆரோன் பிஞ்ச் 68 ரன்கள்
19-வது ஓவரில் மலிங்காவின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்த ஆரோன் பிஞ்ச் 68 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஆனால் இதே ஓவரில் டேவிட் வார்னர் இரண்டு சிக்சர்களை பறக்க விட்டார்.

3 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள்
கடைசி 2 ஓவர்களில் 33 ரன்களை எடுத்ததால் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 157 ரன்கள் என்ற ஸ்கோரை எட்டியது.

மும்பை வெற்றி
பின்னர் 158 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியில் சிதம்பரம் கவுதம் 2-வது ஓவரிலேயே வெளியேற்றப்பட்டார். இதன் பின்னர் லென்டில் சிமோன்சும் அம்பத்தி ராயுடும் இணைந்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றியதுடன், வெற்றிப்பாதைக்கும் அடித்தளம் போட்டுக் கொடுத்தனர்.

சிமோன்ஸ்- ராயுடு அபாரம்
சிமோன்ஸ் 50 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 68 ரன்களிலும், அம்பத்தி ராயுடு 46 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 68 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

மும்பை வெற்றி
18.4 ஓவர்களில் மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 160 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பைக்கு 3வது வெற்றி
9-வது ஆட்டத்தில் ஆடிய மும்பைக்கு இது 3-வது வெற்றியாகும். இதன் மூலம் பிளே-ஆப் சுற்று வாய்ப்பிலும் நீடிக்கிறது.

ஹைதராபாத்துக்கு 5 வது தோல்வி
9-வது ஆட்டத்தில் விளையாடிய ஹைதராபாத்துக்கு இது 5-வது தோல்வியாகும்.


Click it and Unblock the Notifications











