Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்லுல எதிரணின்னா அது மும்பை இந்தியன்ஸ்தான்... சிறப்பான டீம்... முன்னாள் சிஎஸ்கே வீரர் பாராட்டு

டெல்லி : முன்னாள் ஆஸ்திரேலிய மற்றும் சிஎஸ்கே ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் சிஎஸ்கேவின் 2018 கோப்பை வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தவர்.

Recommended Video

நான் விளையாடியதில் T20 போட்டிகளில் Mumbai இந்தியன்ஸ்தான் சிறந்த opponent - Shane Watson

கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அவர், அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்தார்.

இந்நிலையில் ஐபிஎல்லில் மட்டுமின்றி மொத்தமாக டி20 வடிவத்தில் தான் எதிரணியாக எதிர்கொண்ட சிறப்பான அணி குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் போட்டியில் தோல்வி

முதல் போட்டியில் தோல்வி

ஐபிஎல் 2021 தொடர் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடினாலும் பௌலிங்கில் சொதப்பி தோல்வியடைந்துள்ளது சிஎஸ்கே அணி. இந்நிலையில் இன்றைய தினம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பையில் விளையாடவுள்ளது.

கடந்த சீசனில் ஓய்வு

கடந்த சீசனில் ஓய்வு

கடந்த சீசனில் சிஎஸ்கேவில் இடம்பெற்றிருந்தார் முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன். கடந்த சீசனில் சிஎஸ்கே ப்ளே-ஆப்பிற்கு முன்னேறாததை காட்டிலும் அவரது அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

வாட்சன் முக்கிய காரணம்

வாட்சன் முக்கிய காரணம்

கடந்த 2018ல் சிஎஸ்கே ஐபிஎல் கோப்பையை வெற்றி கொண்டதற்கு ஷேன் வாட்சனும் முக்கிய காரணமாக அமைந்திருந்தார். அந்த போட்டியில் அவுட் ஆகாமல் அவர் அடித்த 117 ரன்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தது. கடந்த சீசனில் அக்டோபர் மாதத்தில் சிஎஸ்கேவிற்கான இறுதி போட்டியில் விளையாடிய வாட்சன், நவம்பரில் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்திருந்தார்.

4வது கோப்பை குறித்து நம்பிக்கை

4வது கோப்பை குறித்து நம்பிக்கை

இந்நிலையில் தனது அணியின் மீதான பாசம் தனக்கு சற்றும் குறையவில்லை என்பதை கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் நிரூபித்திருந்தார். இந்த சீசனில் சிஎஸ்கே தனது 4வது டைட்டிலை வெற்றி பெறும் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

வாட்சன் பாராட்டு

வாட்சன் பாராட்டு

இந்நிலையில் இன் கிரேட் கிரிக்கெட்டர் யூடியூப் சேனலுக்கு தான் அளித்த பேட்டியில் ஐபிஎல்லில் மட்டுமின்றி டி20 வடிவத்திலேயே தான் எதிரணியாக விளையாடியதில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே முழுமையான மற்றும் சிறப்பான அணியாக தான் கருதுவதாக வாட்சன் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, April 16, 2021, 16:18 [IST]
Other articles published on Apr 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+