Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"பவுலரா இருந்தபோதே உதை வாங்கினார்.. இவரு பவுலிங் கோச்சா?".. மும்பை இந்தியன்ஸை விமர்சித்த ஸ்ரீகாந்த்

சென்னை: ஐபிஎல் 2027 சீசனுக்காக மும்பை இந்தியன்ஸ் அணி தனது பயிற்சியாளர் குழுவில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது. இதில் நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மெக்லெனகனை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்ததை இந்திய முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நேரடியாக கிண்டலடித்துள்ளார். மெக்லெனகன் விளையாடிய காலத்திலேயே பேட்டர்களிடம் அதிகமாக அடி வாங்கியவர் என்று அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் கீரன் பொல்லார்ட் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், ராபின் உத்தப்பா பேட்டிங் பயிற்சியாளராகவும், டி.திலீப் பீல்டிங் பயிற்சியாளராகவும், மிட்செல் மெக்லெனகன் முதன்மை பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 2026 சீசனில் மும்பை அணி 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று 9-வது இடத்திற்குத் தள்ளப்பட்டதால் இந்த அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன.

Mumbai Indians Krishnamachari Srikkanth Mocks Mumbai Indians Over Mitchell McClenaghan s Appointment as Bowling Coach

இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய ஸ்ரீகாந்த், "ராபின் உத்தப்பா ஒரு சிறந்த பேட்டிங் பயிற்சியாளராக இருப்பார். அவர் ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றவர். அதேபோல் இந்திய அணியில் ரோஹித் சர்மாவுடன் பணியாற்றிய டி.திலீப்பை பீல்டிங் பயிற்சியாளராக நியமித்தது மிகச் சிறந்த முடிவு. ஆனால் மிட்செல் மெக்லெனகன் நியமனம் குறித்து எனக்கு உடன்பாடில்லை. அவர் விளையாடிய காலத்திலேயே ஐபிஎல் போட்டிகளில் பேட்டர்களிடம் செம உதை வாங்கியவர். அவரை எப்படி பந்துவீச்சு பயிற்சியாளராக்கினார்கள் என்று தெரியவில்லை" என்றார்.

மும்பை அணிக்காக 56 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள மெக்லெனகன், 71 விக்கெட்டுகளை வீழ்த்தி அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

IND vs NZ:

IND vs NZ: "இந்திய அணியால் NZ தொடரை முழுசா வெல்ல முடியாது.. 2-2 தான்".. புஜாரா அதிரடி கணிப்பு

தொடர்ந்து பேசிய ஸ்ரீகாந்த், ரோஹித் சர்மா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். "ஹர்திக் பாண்டியா கேப்டனாக வந்த பிறகு அணி முற்றிலும் திசைமாறிப் போய்விட்டது. ஹர்திக்கை வர்த்தகம் செய்து அனுப்பிவிட்டு, அணியை பழையபடி வெற்றிப் பாதைக்குக் கொண்டு வர ரோஹித் சர்மாவை மீண்டும் கேப்டனாக்குவதே சரியான தீர்வாக இருக்கும்" என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

Story first published: Monday, November 2, 2026, 17:13 [IST]
Other articles published on Nov 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+