Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"அடிக்க ரெடி; இனி பேச்சு இல்ல.. வீச்சு தான்" - வாழ்வா, சாவா போட்டிக்கு முன்பு ரோஹித் ஆவேசம்

ஷார்ஜா: ராஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெறும் போட்டியில், மும்பை டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில், இன்று (அக்.5) நடைபெற்று வரும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஷார்ஜாவில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித், பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

தோற்றால் அவுட்

தோற்றால் அவுட்

ஐபிஎல் 2021 தொடரில், மிக முக்கியமான போட்டியில் ஷார்ஜாவில் மும்பையும், ராஜஸ்தானும் மோதுகின்றன. இதில், ஒருவேளை மும்பை தோற்றால், இத்தொடரை விட்டு வெளியேறுவது 99.99 சதவிகிதம் உறுதி. கிரிக்கெட்டில், எப்போதும் 100 சதவிகிதம் என்று சொல்லவே கூடாது. அதனால், ஒரு Safety-க்கு இந்த 99.99. இரு அணிகளுக்குமே இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளன (இன்றைய போட்டியையும் சேர்த்து). இதில், ராஜஸ்தானை விட குறைவான ரன் ரேட் வைத்திருக்கும் அணி மும்பை தான். இவர்களை இருவரையும் விட, 2 புள்ளிகள் அதிகம் பெற்று கொல்கத்தா புள்ளிப்பட்டியலில் மேலே இருந்தாலும், அந்த அணிக்கு மீதமிருப்பது இன்னும் ஒரேயொரு மேட்ச் தான். ஆனால், கொல்கத்தா ரன் ரேட் மிக மிக அதிகம். ஸோ, இரு அணிகளுக்கும் இன்றைய போட்டி வாழ்வா, சாவா போட்டி தான்.

ஆர்ஆர் அணி

ஆர்ஆர் அணி

மும்பை அணியில் ரோஹித் ஷர்மா (c), இஷான் கிஷன் (wk), சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, கைரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, ஜேம்ஸ் நீஷம், நாதன் கூல்டர்-நைல், ஜெயந்த் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், ராஜஸ்தான் அணியில் எவின் லெவிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (w/c), ஷிவம் துபே, க்ளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர், ராகுல் தெவாட்டியா, ஸ்ரேயாஸ் கோபால், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வெளியேறுவது உறுதி

வெளியேறுவது உறுதி

கடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த 190 ரன்கள் இலக்கை, 2 ஓவர்கள் மிச்சம் வைத்து மற்ற அணிகளை அலற வைத்தது ராஜஸ்தான். குறிப்பாக மும்பையை. ஸோ, இன்று அப்படியொரு ஆக்ரோஷமான ஆட்டத்தை ராஜஸ்தான் வெளிப்படுத்தும். இதில், சிக்கி ஒருவேளை மும்பை தோற்றால், ஏற்கனவே மும்பையை விட அதிக ரன் ரேட் வைத்திருக்கும் ராஜஸ்தான், மேற்கொண்டு இரு புள்ளிகளையும் பெற்று, ரன் ரேட்டையும் வலிமையாக்கிக் கொள்ளும். இதனால், ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் மும்பை வென்றாலும், 12 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும். ராஜஸ்தான் தங்களது கடைசி போட்டியில் கொல்கத்தாவிடம் தோற்றாலும், மும்பையை விட அதிக ரன் ரேட் வைத்திருக்கும். ஸோ, இரு அணிகளுமே வெளியேற நேரிடும். எனவே, எப்படிப் பார்த்தாலும், இன்றைய போட்டியில் மும்பை தோற்றால், வெளியேறுவது உறுதி.

நாங்கள் கவலைப்படல

நாங்கள் கவலைப்படல

இந்த போட்டியில், மும்பை அணியில் இரு முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஃபார்ம் இல்லாமல் தடுமாறி வந்த விக்கெட் டி காக் நீக்கப்பட்டு, வெளியே இருந்த இஷான் கிஷன் மீண்டும் அணியில் கொண்டுவரப்பட்டுள்ளார். அதேபோல், இம்பேக்ட் ஏற்படுத்த முடியாமல் தடுமாறி வந்த க்ருனால் பாண்ட்யா நீக்கப்பட்டு, நீஷம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கும் இது வாழ்வா? சாவா? ஆட்டம் தான். டாஸ் போட்ட பிறகு பேசிய ரோஹித் ஷர்மா, முதலில் பேட்டிங் செய்தும் பார்த்துவிட்டோம், பவுலிங் செய்தும் பார்த்துவிட்டோம். எதுவும் பெரிதாக ஒர்க் ஆகவில்லை. ஸோ, இந்த போட்டியில் மீண்டும் சேஸிங் செய்யலாம் என்று நினைக்கிறோம். இலக்கை மனதில் வைத்து ஆடலாம் என்று இருக்கிறோம். எல்லா வியூகமும் எங்களிடம் பக்காவாக இருக்கிறது. அதை களத்தில் செய்லபடுத்துவதே எங்கள் நோக்கம். பாயிண்ட்ஸ் டேபிள் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படல. நன்றாக விளையாடினால் ஆட்டோமேட்டிக்காக வெற்றி எங்களைத் தேடி வரும் என்று கூறியுள்ளார்.

Story first published: Tuesday, October 5, 2021, 21:56 [IST]
Other articles published on Oct 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+