Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதிர்பார்க்கவேயில்லை.. முக்கியமான 4 பவுலர்களை வெளியே அனுப்பிய மும்பை இந்தியன்ஸ்.. பரபரப்பு!

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து 4 முக்கியமான பவுலர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணி வலிமையான அணியாக உள்ள நிலையில் 4 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

2021 ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் தாங்கள் விடுவிக்க விரும்பும் வீரர்களின் லிஸ்டை வெளியிட்டு வருகிறது. சிஎஸ்கே அணியில் இருந்து தற்போது 6 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிஎஸ்கேவில் இருந்து கேதார் ஜாதவ், முரளி விஜய், பியூஸ் சாவ்லா, ஹர்பஜன் சிங், மோனு சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இது போக வாட்சன் ஓய்வு பெற்றுள்ளார்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் மும்பையில் இருந்து ஜேம்ஸ் பாட்டின்சன், நாதன் கவுண்டர் நைல், மிட்சல் மெக்லாங்கன், லசித் மலிங்கா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லோரும் பவுலர்கள். உலகத்தரமான பவுலர்கள் மும்பை அணியில் நீக்கப்பட்டுள்ளனர்.

நீக்கம்

நீக்கம்

இந்த 4 பேரை மட்டும் மும்பை அணி நீக்கி உள்ளது. மும்பை அணியில் கடந்த சீசனில் இவர்கள் பெரிதாக வாய்ப்பு பெறவில்லை. அந்த அணியில் ஏற்கனவே சிறந்த பவுலர்கள் பலர் உள்ளனர்.

பவுலர்கள்

பவுலர்கள்

இதன் காரணமாக தற்போது இந்த 4 பவுலர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மும்பையில் இருந்து இந்திய வீரர்கள் யாரும் நீக்கப்படவில்லை. ரோஹித் சர்மா, டீ காக், சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், குர்னால் பாண்டியா , ஜெயந்த் யாதவ், டிரெண்ட் போல்ட், பும்ரா, சோரப் திவாரி, ராகுல் சாகர் ஆகியோர் எப்போதும் போல் ஆடுவார்கள்.

கிறிஸ் லைன்

கிறிஸ் லைன்

மும்பையில் இருந்து கிறிஸ் லைன் நீக்கப்பட வாய்ப்புள்ளது. இவர் சிஎஸ்கே வர வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. ஆனால் இவரை மும்பை அணி ரிலீஸ் செய்யவில்லை .

Story first published: Wednesday, January 20, 2021, 23:55 [IST]
Other articles published on Jan 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+