Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் போட்ட சட்டையை இனி யாரும் போடக் கூடாது... மும்பை இந்தியன்ஸ் முடிவு

பெங்களூர்: சச்சின் டெண்டுல்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவர் வழக்கமாக அணிந்து ஆடும் 10ம் எண் ஜெர்சிக்கும் ஓய்வை அறிவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்.

இனிமேல் மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த வீரருக்கும் 10ம் எண் ஜெர்சி வழங்கப்பட மாட்டாது.

அந்த எண்ணை இனி யாருக்கும் ஒதுக்குவதில்லை என்ற முடிவுக்கு மும்பை இந்தியன்ஸ் வந்துள்ளது.

ஜெர்சிக்கும் ஓய்வு

ஜெர்சிக்கும் ஓய்வு

சச்சின் தனது முழுமையான ஓய்வை சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து அவர் அணிந்து வந்த 10ம் எண் ஜெர்சிக்கும் ஓய்வை அறிவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

கடந்த வருடமே முடிவு

கடந்த வருடமே முடிவு

இந்த முடிவை கடந்த வருடமே மும்பை இந்தியன்ஸ் எடுத்து விட்டது. சச்சின் எப்போது முழுமையாக ஓய்வு பெறுகிறாரோ அன்று முதல் 10ம் எண் ஜெர்சிக்கும் ஓய்வளிக்க மும்பை இந்தியன்ஸ் திட்டமிட்டிருந்தது. அதன்படி தற்போது 10ம் எண்ணுக்கான ஓய்வை அது அறிவித்துள்ளது.

மும்பையில் 200வது டெஸ்ட்

மும்பையில் 200வது டெஸ்ட்

சச்சின் டெண்டுல்கர் தனது 200வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மும்பையின் வாங்கடே மைதானத்தில் நவம்பர் மாதம் ஆடவுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

இந்திய அணியிலும் 10

இந்திய அணியிலும் 10

இந்திய அணியிலும் 10ம் எண் ஜெர்சியுடன்தான் சச்சின் ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்ட்டிக்கு வந்த 10..

பார்ட்டிக்கு வந்த 10..

சமீபத்தில் சாம்பியன்ஸ் லீக் தொடர் வெற்றியைக் கொண்டாட மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நடத்திய பார்ட்டிக்கு, அணி நிர்வாகிகள், வீரர்கள் என அனைவருமே சச்சினைக் கெளரவிக்கும் வகையில் 10ம் எண் ஜெர்சி அணிந்து வந்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

நீதா அம்பானி சொல்வது என்னென்னா...

நீதா அம்பானி சொல்வது என்னென்னா...

ஜெர்சிக்கு ஓய்வு தருவது குறித்து மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர் நீத்தா அம்பானி கூறுகையில், இது எங்களுக்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணம். சச்சினைக் கெளரவப்படுத்த அவர் அணிந்த 10ம் எண் ஜெர்சியை இனி யாருக்கும் ஒதுக்குவதில்லை என்று முடிவு செய்துள்ளோம் என்றார்.

கால்பந்தில் சகஜம்.. கிரிக்கெட்டுக்குப் புதுசு

கால்பந்தில் சகஜம்.. கிரிக்கெட்டுக்குப் புதுசு

ஒரு ஜெர்சிக்கு ஓய்வு தருவது என்பது கால்பந்து விளையாட்டில் சகஜமானதுதான். ஆனால் கிரிக்கெட்டுக்கு இது புதிதாகும்.

Story first published: Tuesday, October 15, 2013, 13:51 [IST]
Other articles published on Oct 15, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+