Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Mumbai Indians: பும்ரா, திலக் வர்மாவை திட்டிய ஹர்திக்.. ரோஹித்தை கேப்டனாக்குங்க.. மனோஜ் காட்டம்

மும்பை: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது மிகப்பெரிய இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளது. விளையாடிய 5 போட்டிகளில் 4-ல் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் அதல பாதாளத்தில் இருக்கும் அந்த அணியில், கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் சக வீரர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலைமை கைமீறிப் போவதால், அணியை மீட்க ஒரு அதிரடி மாற்றத்திற்கு முன்னாள் வீரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அந்த மாற்றம் நிகழ்ந்தால் மும்பை அணியின் தலையெழுத்தே மாற வாய்ப்புள்ளது.

இந்தச் சீசனில் ஹர்திக் பாண்டியா கேப்டனாகப் பொறுப்பேற்றது முதல் மும்பை அணிக்குக் காலம் சரியில்லை என்றே சொல்லலாம். மைதானத்தில் அவரது உடல்மொழி மிகுந்த விரக்தியை வெளிப்படுத்துகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, தோல்விக்குத் தனது சக வீரர்களின் மெத்தனமே காரணம் என்று ஹர்திக் வெளிப்படையாகச் சாடியது அணியின் ஒற்றுமையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. குறிப்பாக திலக் வர்மா போன்ற வீரர்களைக் குறிவைத்து அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Mumbai Indians Row Hardik Pandya bash Bumrah Under Pressure as Experts Suggest Return to Rohit Sharma

மீண்டும் ரோஹித் சர்மா?

ஹர்திக் பாண்டியாவின் இந்தச் சொதப்பல் கேப்டன்சியை கண்டு அதிருப்தியடைந்துள்ள முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி ஒரு அதிரடி யோசனையை முன்வைத்துள்ளார். "ஹர்திக் பாண்டியாவால் கேப்டன்சி அழுத்தத்தைச் சமாளிக்க முடியவில்லை. அவருக்குப் பதவியில் இருந்து சிறிது காலம் ஓய்வு கொடுத்துவிட்டு, மீண்டும் ரோஹித் சர்மாவையே கேப்டனாக நியமிக்க வேண்டும். ரோஹித்தை நீக்கியதே மிகப்பெரிய அநீதி. ஹர்திக் கோப்பை வென்று தருவார் என்று நிர்வாகம் எதிர்பார்த்தது, ஆனால் தற்போதுள்ள சூழலில் அது நடப்பதாகத் தெரியவில்லை" என்று அவர் காரசாரமாகக் கூறியுள்ளார்.

பும்ரா - ஹர்திக் வாக்குவாதம்

கேப்டன்சி ஒருபுறமிருக்க, ஹர்திக் பாண்டியாவின் தனிப்பட்ட ஆட்டமும் படுமோசமாக உள்ளது. 5 போட்டிகளில் வெறும் 81 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவர், பந்துவீச்சில் 11.16 என்ற எகானமி விகிதத்தில் ரன்களை வாரி வழங்கியுள்ளார். இதற்கிடையே, ஜஸ்பிரித் பும்ராவுக்கும் ஹர்திக்குக்கும் இடையே மைதானத்திலேயே பீல்டிங் அமைப்பதில் வாக்குவாதம் நடந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஹர்திக் அமைத்த வியூகத்தில் பும்ராவுக்கு உடன்பாடு இல்லாதது அவரது முகத்திலேயே அப்பட்டமாகத் தெரிந்தது.

வரலாறு திரும்புமா?

மும்பை அணிக்கு ஒரு சிறு நம்பிக்கை ஒளி மிச்சமுள்ளது. 2014-ல் முதல் 5 போட்டிகளில் தோற்ற பிறகும் அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அதேபோல் 2015-ல் 4 தோல்விகளுக்குப் பின் மீண்டு வந்து கோப்பையை வென்றது. ஆனால், அந்த அதிசயத்தை மீண்டும் நிகழ்த்த ரோஹித் சர்மாவின் அனுபவம் மற்றும் தலைமைப் பண்பு இப்போது தேவை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். ஏப்ரல் 20-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டி, ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் பதவி நீடிக்குமா என்பதைத் தீர்மானிக்கும் இறுதி வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, April 18, 2026, 9:41 [IST]
Other articles published on Apr 18, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+