சென்னை : மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கவுட் மற்றும் விக்கெட் கீப்பிங் கன்சல்டண்ட் கிரண் மோரேவிற்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கிடையில் வரும் 9ம் தேதி தொடரின் முதல் போட்டி நடைபெறவுள்ளது.
நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தொடரின் முதல் போட்டியில் வரும் 9ம் தேதி ஆர்சிபி அணியுடன் சென்னையில் மோதவுள்ளது. இதையொட்டி இரு அணிகளும் சென்னையில் முகாமிட்டுள்ளன. கடந்த 2 முறை தொடர்ந்து கோப்பையை வென்றுள்ள மும்பை அணி, இதில் ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கிறது.
இந்நிலையில் அந்த அணியின் ஸ்கவுட் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆலோசகர் கிரண் மோரேவிற்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாத நிலையில், மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாதிப்பு கண்டறியப்பட்டு அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இது அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.