Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இரவில் நடந்த காரசார விவாதம்; வீரர்களை நெருப்பாய் மாற்றிய ரோஹித்.. ராஜஸ்தானை வீழ்த்த கடைசி ஆயுதம்!

ஷார்ஜா: ராஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெறும் போட்டியில், மும்பை தோற்றால், நடப்பு சாம்பியன் ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறுவது உறுதியாகிவிடும்.

ஐபிஎல் தொடரில், இன்று (அக்.5) நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இரவு "ஏழரை" மணிக்கு தொடங்குகிறது.

இதில், ராஜஸ்தான் வெற்றிப் பெற்றால், மும்பை ரசிகர்கள் தலையில் முக்காடு போட வேண்டியிருக்கும் என்ற வருத்தமான தகவலை இச்செய்தியில் பகிர்கிறோம்.

 மிக முக்கிய மேட்ச்

மிக முக்கிய மேட்ச்

இதோ.. இன்று.. இன்னும் சில மணி நேரங்களில் மிக முக்கியமான ஐபிஎல் போட்டிகள், உங்களை மகிழ்விக்க காத்திருக்கிறது. மகிழ்விக்கவா? யாருக்கு..? நீங்க மும்பை அல்லது ஆர்ஆர் ரசிகர்கள் இல்லைன்னா.. இன்றைய மேட்ச் உங்களுக்கு ஒரு ட்ரீட் தான். ஏனெனில், இன்றைய போட்டி, இன்னொரு முக்கியமான அணி நடப்பு தொடரில் இருந்து வெளியேற காரணமாக இருக்கலாம். அந்த முக்கிய அணி மும்பை இந்தியன்ஸ் தான் என்று.. சாரி.. சாரி.. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி.

 வெளியேறுவது உறுதி

வெளியேறுவது உறுதி

ஆம்! இன்று ஷார்ஜாவில் மும்பையும், ராஜஸ்தானும் மோதவுள்ளன. இதில், ஒருவேளை மும்பை தோற்றால், இத்தொடரை விட்டு வெளியேறுவது 99.99 சதவிகிதம் உறுதி. கிரிக்கெட்டில், எப்போதும் 100 சதவிகிதம் என்று சொல்லவேக் கூடாது. அதனால், ஒரு Safety-க்கு இந்த 99.99. இரு அணிகளுக்குமே இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளன (இன்றைய போட்டியையும் சேர்த்து). இதில், ராஜஸ்தானை விட குறைவான ரன் ரேட் வைத்திருக்கும் அணி மும்பை தான். இவர்கள் இருவரையும் விட, 2 புள்ளிகள் அதிகம் பெற்று கொல்கத்தா புள்ளிப்பட்டியலில் முன்னாடி இருந்தாலும், அந்த அணிக்கு மீதமிருப்பது இன்னும் ஒரேயொரு மேட்ச் தான். ஆனால், கொல்கத்தா ரன் ரேட் மிக மிக அதிகம்.

 எலிமினேஷன் கன்ஃபார்ம்

எலிமினேஷன் கன்ஃபார்ம்

ஸோ, ஆல்ரெடி கொல்கத்தா நான்காவது அணியாக பிளே ஆஃப் நுழைய தயாராக உள்ளது. அதேசமாயம், கடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த 190 ரன்கள் இலக்கை, 2 ஓவர்கள் மிச்சம் வைத்து மற்ற அணிகளை அலற வைத்துள்ளது ராஜஸ்தான். குறிப்பாக மும்பையை. ஸோ, இன்று அப்படியொரு ஆக்ரோஷமான ஆட்டத்தை ராஜஸ்தான் வெளிப்படுத்தும். இதில், சிக்கி ஒருவேளை மும்பை தோற்றால், ஏற்கனவே மும்பையை விட அதிக ரன் ரேட் வைத்திருக்கும் ராஜஸ்தான், மேற்கொண்டு இரு புள்ளிகளையும் பெற்று, ரன் ரேட்டையும் வலிமையாக்கிக் கொள்ளும். இதனால், ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் மும்பை வென்றாலும், 12 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும். ராஜஸ்தான் தங்களது கடைசி போட்டியில் கொல்கத்தாவிடம் தோற்றாலும், மும்பையை விட அதிக ரன் ரேட் வைத்திருக்கும். ஸோ, இரு அணிகளுமே வெளியேற நேரிடும். எனவே, எப்படிப் பார்த்தாலும், இன்றைய போட்டியில் மும்பை தோற்றால், எலிமினேஷன் கன்ஃபார்ம்.

 அதிசயம் நிகழ வேண்டும்

அதிசயம் நிகழ வேண்டும்

ஒருவேளை மும்பை பிளே ஆஃப் நுழைய வேண்டுமெனில், இன்று ராஜஸ்தானுக்கு எதிராகவும் வென்று, ஹைதராபாத் அணிக்கு எதிராகவும் வென்று.. அதாவது அதிக ரன் ரேட்டுடன் வென்று, கொல்கத்தா அடுத்து ராஜஸ்தானுடன் தோற்றால் இந்த அதிசயம் நிகழலாம். ஆனால், கொல்கத்தாவோ, ராஜஸ்தானோ மும்பைக்கு இந்த வாய்ப்பை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. ஒரு முடிவோடு தான், தங்களது இறுதிக் கட்ட போட்டிகளை அணுகி வருகின்றன. அதற்கு எடுத்துக்காட்டாக அமைந்த போட்டியே சென்னைக்கு எதிரான ராஜஸ்தானின் "ருத்ரதாண்டவ" ஆட்டமாகும். இந்நிலையில், போட்டிக்கு முன்பு நடந்த அணி மீட்டிங்கில் பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா, "நாம் எப்படிப்பட்ட அணி என்பதை மற்ற அணிகளுக்கு நிரூபிக்க வேண்டும். மறந்துவிடாதீர்கள்.. நாம் தான் ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன்ஸ் அணி. ஒருவேளை நாம் தோற்றாலும், எதிரணி ஜெயித்த பிறகும், நம்மை நினைத்து பயப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Story first published: Tuesday, October 5, 2021, 22:36 [IST]
Other articles published on Oct 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+