For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நடராஜன்தான் வேண்டும்.. மினி ஏலத்திற்கு முன் நடந்த டீலிங்.. பேரம் பேசிய "அந்த" பெரிய அணி.. பின்னணி!

சென்னை: 2021 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக டிரேடிங் விண்டோ திறந்திருந்த நிலையில் தமிழக வீரர் நடராஜனை எடுக்க முக்கியமான அணி ஒன்று முயன்றதாக கூறுகிறார்கள்.

2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் நாளை நடக்கிறது. சென்னையில் மினி ஏலமாக இது நடக்க உள்ளது.

1000க்கும் அதிகமான வீரர்கள் இதில் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். இதில் பிசிசிஐ இறுதியாக 292 வீரர்களை ஏலத்திற்கு தேர்வு செய்தது. ஏலத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

ஏலம்

ஏலம்

2021 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக டிரேடிங் விண்டோ திறந்திருந்த நிலையில் தமிழக வீரர் நடராஜனை எடுக்க முக்கியமான அணி ஒன்று முயன்றதாக கூறுகிறார்கள்.அதன்படி இந்த மாதம் தொடக்கம் வரையில் டிரேடிங் விண்டோ திறக்கப்பட்டு இருந்தது. வீரர்களை மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது.

மாற்றம்

மாற்றம்

டிரேடிங் விண்டோ என்றால் ஒரு அணி ஏலத்திற்கு முன்பாக அல்லது பின்பாக தங்கள் அணியில் இருந்து வீரரை வேறு அணிக்கு கொடுத்துவிட்டு அதற்கு உரிய தொகையை பெற்றுகொள்வது ஆகும். சமயங்களில் பண்டம் மாற்று முறை போல ஒரு வீரரை இங்கிருந்து வேறு அணிக்கு அனுப்பிவிட்டு அங்கிருந்து வேறு வீரரை பெற்றுக்கொள்வதும் நடக்கும்.

சிறப்பு

சிறப்பு

இதில் மும்பை அணி பொதுவாக டிரேடிங் செய்வதை விரும்பும். வேறு அணியில் கலக்கும் முக்கிய வீரர்களை அதிக தொகை கொடுத்து வாங்கிக்கொள்ள விரும்பும். டாப் வீரர்கள் எல்லோரும் தங்கள் அணியில்தான் இருக்க வேண்டும் என்று மும்பை அணி விரும்பும்.

எப்படி

எப்படி

முன்பு ஹைதராபாத் வீரர் ரஷீத் கானை கூட மும்பை அணி டிரேடிங் முறையில் எடுக்க முயன்றது. தற்போது அதேபோல் நடராஜனையும் மும்பை அணி டிரேடிங் முறையில் கேட்டு இருக்கிறது. மும்பை அணியில் இருந்து பாட்டின்சன் வெளியேறிவிட்டார். இவர் இந்த வருடம் ஐபிஎல் விளையாடவில்லை.

ஆடவில்லை

ஆடவில்லை

இதன் காரணமாக பாட்டின்சனுக்கு பதிலாக நடராஜனை கொண்டு வர மும்பை அணி பிளான் போட்டு இருக்கிறது . இதற்காக ஹைதராபாத் அணியுடன் பேரம் பேசி உள்ளது. ஆனால் ஹைதராபாத் அணி என்ன நடந்தாலும் நடராஜனை கொடுக்க முடியாது என்று கூறியுள்ளது.

ஏன்

ஏன்

புவனேஷ்வர் குமார், ஸ்டோய்னிஸ் போன்ற வீரர்கள் காயம் அடைய வாய்ப்புள்ளது. அதேபோல் கலீல், சந்தீப் சர்மா பார்மில் இல்லை. இதனால் நடராஜனை டிரேட் செய்ய முடியாது என்று ஹைதராபாத் அணி மிகவும் உறுதியாக கூறியுள்ளது.

Story first published: Thursday, February 18, 2021, 8:33 [IST]
Other articles published on Feb 18, 2021
English summary
Mumbai Indians Tried to lure Natarajan by Trading ahead of IPL 2021
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+