மும்பை: பத்தாவது ஐபிஎல் சீசன் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று களம்காண்கின்றன. இந்தப் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.
இதில் ஏற்கனவே 7 விக்கெட் வித்தியாசத்தில் புனேவிடம் தோற்ற மும்பை இந்தியன்ஸ் இன்றைய ஆட்டத்தை எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இதேபோல் கடந்த போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா அணி வெற்றி முகத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

ஒன்றுக்கொன்று சளைக்காத பலம் வாய்ந்த இரு அணிகளும் இன்று மும்பை வான்கடே மைதானத்தில இன்று இரவு 8 மோதுகின்றன. இதில் மும்பை அணியில், கேப்டன் ரோகித் ஷர்மா, பும்ரா, ஜோஸ் பட்லர், ஸ்ரேயாஷ் கோபால், கவுதம், குணரத்னே, ஹர்பஜன் சிங், ஜான்சன், குல்வந்த், சிதேஷ் லெட்,. மெக்லினகன், மலிங்கா, ஹர்திக் பாண்ட்யா, குர்ணல் பாண்ட்யா, பார்த்திவ் படேல், போலார்டு, நிக்கோலஸ் பூரன், தீபக் பூனியா, நிதிஷ் ரானா, ராயுடு, ஜிடேஷ் சர்மா, கரன் ஷர்மா, சிம்மன்ஸ், சவுத்தி, சுச்சித், தாக்கூர், திவாரி, வினய் குமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இதேபோல் கேப்டன் கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் போல்ட், டேரன் பிராவோ, பியூஷ் சாவ்லா, சுல்டன் நைல், ரிஷி தவான், கோஷ், ஷெல்டன் ஜாக்சன், இஷாங்க் ஜாகி, குல்தீப் யாதவ், கிறிஸ் லின், நரைன்இ மணிஷ் பாண்டே, யூசப் பதான், ரூவ்மேன் பாவெல், ராஜ்பூட், சஞ்சய் யாதவ், ஷாகிப் அல் ஹசன், ராபின் உத்தப்பா, கிறிஸ் வோக்ஸ், சங்சய் யாதவ், உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.