Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திரும்பி வருவோம்... ஆனா ஸ்ட்ராங்கா வருவோம்... அப்ப எங்களோட வெற்றியை தடுக்க முடியாது!

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 17வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

Recommended Video

Mumbai Indians மீண்டும் தோல்வி! KL Rahul, Gayle செம Finishing | OneIndia Tamil

இதில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடிய நிலையிலும் அந்த அணி வெற்றியை கைநழுவியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் திணறல்

மும்பை இந்தியன்ஸ் திணறல்

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 17வது போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி பௌலிங்கின் முன்னால் அந்த அணி வீரர்கள் தாக்குபிடிக்க முடியாமல் திணறினர்.

பவுண்டரி, சிக்ஸ் மழை

பவுண்டரி, சிக்ஸ் மழை

இந்நிலையில் அடுத்ததாக பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் மற்றும் கிறிஸ் கெயில் மூவரும் இணைந்து சிறப்பான வெற்றியை சாத்தியப்படுத்தினர். சிக்ஸ் மற்றும் பவுண்டரி மழையால் சென்னை மைதானம் பரபரத்தது. 17.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது பஞ்சாப் கிங்ஸ்.

வீணான முயற்சிகள்

வீணான முயற்சிகள்

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ரோகித் சர்மா 63 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும் அடித்து அந்த அணி ஓரளவுக்கு ரன்களை குவிக்க உதவினர். கீரன் பொல்லார்ட் தன்னுடைய அதிரடியை காட்ட மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணானது.

அடுத்த கட்டத்தில் அதிரடி

அடுத்த கட்டத்தில் அதிரடி

சென்னையில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து அடுத்த இடத்தில் விளையாடவுள்ளது. இந்நிலையில் அணி தன்னுடைய முதல் கட்டத்தை முடித்துள்ளதாகவும் அடுத்த கட்டத்தில் சிறப்பான ஆட்டங்களை அளிக்கும் என்றும் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

வலிமையாக எதிர்கொள்ளும்

வலிமையாக எதிர்கொள்ளும்

போட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த கட்டத்தில் தன்னுடைய 100 சதவிகித போட்டிகளை மும்பை இந்தியன்ஸ் அளிக்கும் என்று கூறியுள்ளார். அடுத்த கட்ட போட்டிகளை விளையாடும்போது அதை வலிமையாக எதிர்கொள்ளும் என்றும் அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, April 24, 2021, 10:40 [IST]
Other articles published on Apr 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+