Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடர் தோல்விகள்... சிறப்பான கம்பேக்... மும்பை இந்தியன்ஸ் அதிரடி வெற்றி...

டெல்லி : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய தினம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்த மும்பை அணி வீரர்கள், சிறப்பாக பந்துவீசினர்.

தொடர்ந்து பேட்டிங்கிலும் அந்த அணியின் குவின்டன் டீ காக் மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ளனர்.

சென்னையில் திணறல்

சென்னையில் திணறல்

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதுவரை சென்னையில் விளையாடியுள்ள 5 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து சென்னை பிட்சை குறை கூறி வந்தது.

பீல்டிங் தேர்வு

பீல்டிங் தேர்வு

இந்நிலையில் இன்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது மும்பை அணி. அந்த அணியின் பௌலர்கள் ராகுல் சஹர், பும்ரா, ட்ரெண்ட் போல்ட் சிறப்பாக பந்து வீசினர். குறிப்பாக ராகுல் சஹர், அதிரடியாக விளையாடி வந்த ராஜஸ்தானின் துவக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரை அவுட்டாக்கினார்.

171 ரன்களை அடித்த ராஜஸ்தான்

171 ரன்களை அடித்த ராஜஸ்தான்

பும்ராவும் ரன்களை சுருக்கிய நிலையில், ராஜஸ்தான் அணி 171 ரன்களை மட்டுமே அடித்திருந்தது. இதையடுத்து விளையாடிய மும்பை அணியின் ரோகித் சர்மா 14 ரன்களிலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். ஆயினும் அணியின் குவின்டன் டீ காக் அவுட்டாகாமல் இறுதிவரை இருந்து 70 ரன்களை அடித்து போட்டியை வெற்றியாக மாற்றிக் காட்டினார்.

39 ரன்கள் குவிப்பு

39 ரன்கள் குவிப்பு

மேலும் க்ருணால் பாண்டியாவும் சிறப்பாக விளையாடி 39 ரன்களை அடித்திருந்தார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 172 இலக்கை 18.3 ஓவர்களிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி முடித்தது. 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் இந்த வெற்றியை பெற்றுள்ளது.

வெற்றியை வெற்ற மும்பை அணி

வெற்றியை வெற்ற மும்பை அணி

தங்களது தோல்விகளுக்கு தொடர்ந்து சென்னை பிட்சை குறைகூறி வந்த மும்பை இந்தியன்ஸ் அணி, தாங்கள் கூறியதை போலவே தற்போது டெல்லியில் போட்டி மாறியதும் வெற்றியை பெற்றுள்ளது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தனது வெற்றிகளை தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Thursday, April 29, 2021, 19:56 [IST]
Other articles published on Apr 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+