Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அணியில் சேஞ்ச்... வலிமையோட களமிறங்கிய ராஜஸ்தான்... வீரர்களிடம் வெற்றிக்கான தீவிரம்

டெல்லி : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 24வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

24வது போட்டி

24வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் 24வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையில் துவங்கியுள்ளது. டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் 2021 தொடரின் புள்ளிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி 4வது இடத்தில் உள்ள நிலையில் இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

நெருக்கடியில் துவக்க வீரர்கள்

நெருக்கடியில் துவக்க வீரர்கள்

அந்த அணியின் மிடில் ஆர்டரின் வீரர்கள் கீரன் பொல்லார்ட், க்ருணால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் இந்த சீசனில் மிடில் ஆர்டரில் சொதப்பி வருகின்றனர். மேலும் ஹர்திக் பாண்டியா பௌலிங்கையும் செய்யவில்லை. இதையடுத்து அணியின் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், மற்றும் ரோகித் சர்மாமீது நெருக்கடி அதிகரித்து காணப்படுகிறது.

வெளியேறிய வீரர்கள்

வெளியேறிய வீரர்கள்

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோரும் கொரோனா காரணமாக ஆன்ட்ரூ டை மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோரும் அந்த அணியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதனால் அந்த அணி பலமிழந்து காணப்படுகிறது.

வலிமையான எதிரணி

வலிமையான எதிரணி

இதையடுத்து இருக்கும் வீரர்களை கொண்டு விளையாட வேண்டிய நிலைக்கு அந்த அணி தள்ளப்பட்டுள்ளது. மேலும் இருக்கும் வீரர்களை கொண்டு வெற்றியை பெறவும் போராடி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றுள்ள அந்த அணி, இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

பீல்டிங் தேர்வு

பீல்டிங் தேர்வு

இதனிடையே, இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் துவக்க வீரர்களாக களமிறங்கி ஆடி வருகின்றனர்.

Story first published: Thursday, April 29, 2021, 17:16 [IST]
Other articles published on Apr 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+